MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வட கிழக்கு பருவமழைக்கு குட் பாய்.! தமிழகத்தில் இனி வெயில் தானா.? வானிலை மையம் அப்டேட்

வட கிழக்கு பருவமழைக்கு குட் பாய்.! தமிழகத்தில் இனி வெயில் தானா.? வானிலை மையம் அப்டேட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Jan 24 2025, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது. இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்கள் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

24

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  இன்று மற்றும் நாளை (24-01-2025 மற்றும் 25-01-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
Heavy Rain

Heavy Rain

ஜனவரி 26ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். எனவும் இதனை தொடர்ந்து  29-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

44
rain temperature rise

rain temperature rise

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

நாளை (25-01-2025): வானம் ஓரளவு காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு மழை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
Recommended image2
கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!
Recommended image3
போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved