- Home
- Tamil Nadu News
- School College Holiday: குட்நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
School College Holiday: குட்நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Thiruthani Murugan Temple
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோயில். இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக விஷேச நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆடித் கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இதையும் படிங்க: 100 அடியை எட்டிய மேட்டூர் அணை! சீறி பாய்ந்து வரும் ஒரு லட்சம் கனஅடி நீர்! எப்போது முழு கொள்ளளவை எட்டும்?
School Working Day
இந்த விடுமுறையை ஈடும் செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.