- Home
- Tamil Nadu News
- இசிஆரில் திமுக கொடியுடன் பெண்களை துரத்திய சொகுசு கார்.! உயிர் பயத்தில் நள்ளிரவில் அலறிய இளம் பெண்கள்
இசிஆரில் திமுக கொடியுடன் பெண்களை துரத்திய சொகுசு கார்.! உயிர் பயத்தில் நள்ளிரவில் அலறிய இளம் பெண்கள்
சென்னையில் திமுக கொடி கட்டிய காரில் இருந்து இளைஞர்கள் இளம்பெண்களை துரத்தி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இசிஆரில் திமுக கொடியுடன் பெண்களை துரத்திய சொகுசு கார்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ள. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் திமுக அனுதாபி என கூறப்படும் ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவத்தில் யார் அந்த சார் என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தியுள்ளது.
திமுக கொடியோடு வந்த கார்
இந்த நிலையில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் திமுக கட்சி கொடியோடு கார் ஒன்று சென்னை இசிஆர் சாலையில் நடு ரோட்டில் நிற்கிறது.
அதில் இருந்து இளைஞர் ஒருவர் வேகமாக இறங்கி பின்னால் நிற்கும் பெண்கள் வந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓடி வருகிறான். இதனால் இதனால் பயந்து அலறிய இளம்பெண்கள் கதறி துடிக்கிறார்கள். அதற்குள் காரை பின் முன்பக்கமாக எடுக்கும்போது காரின் கதவை அந்த இளைஞர் தட்டுகிறார்.
அலறிய பெண்கள்
இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது உறவினர்களுக்கு அந்த பெண் போன் செய்ய கூறுகிறார்கள். இதனையடுத்து சினிமா படத்தில் வருவது போல் பின் பக்கமாக ரிவர்ஸ் எடுத்து காரை வேறு பக்கமாக இயக்குகிறார்கள். இருந்த போதும் அந்த காரை விடாமல் துரத்தும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை மறித்து மிரட்டுகிறார்கள்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து . இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் எங்கு நடைப்பெற்றது? அந்த பெண்களுக்கு என்ன ஆனது? காரில் விரட்டிய நபர்கள் யார் எனவும் விசாரணை. நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக கண்டனம்
இதற்கிடையே இந்த வீடியோ காட்சி தொடர்பாக பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க கொடி கட்டிய காரில் ஒரு கயவர் கூட்டம் பெண்களை துரத்துகிறது நடு ரோட்டில். இரும்புக்கரத்தை விற்று பேரிச்சம் பழத்துக்கு போட்டு ஆட்சி நடத்தும் முதல்வரே இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் லட்சணமா? தி.மு.க கொடி கட்டினால் எந்த வன்முறையும் செய்யலாமா? எனகேள்வி எழுப்பியுள்ளார்,