சூப்பர் சான்ஸ்.! 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடம்.! உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் நடைபெறும் மெகா ஜாப் முகாம்களில் 20,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
job opportunities
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் படிப்பு முடித்து வேலையை தேடி பல இடங்களுக்கு அலைகின்றனர். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை அரசு பணி ஒன்றையே கனவாக கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் உரிய பயிற்சி அளித்து அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஓராண்டிற்குள் 75ஆயிரம் முதல் 1 லட்சம் பணியிடம் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இதே போல சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து கடனுதவிக்காக வழிகாட்டியும் வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்களோடு தமிழக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக நுற்றுக்கணக்கான தனியார் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
jobs
சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
இதனால் தங்கள் நிறுவனத்திற்கு அரசின் உதவியோடு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தனியார் நிறுவனத்தோடு இணைந்து 8வது படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாளை (28-09-2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இராமநாதபுரம் முஹம்மது சதக்ஹமித் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
TIRUPPUR JOB
. சிறப்பு அம்சங்கள்
வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
10000-க்கும் மேற்பட்ட காலி பணிக்காலியிடங்களுக்கு பணியாளர்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெறும்,
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல்,
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
job fair
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி/ +2/ ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு / பி.இ. படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லையெனவும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது
18 முதல் 40 வரை
மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
job fair
இதே போல திருப்பூரிலும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 28-09-2024 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருப்பூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ் வளாகம், அரச்சலூர் சாலை, காங்கேயம் திருப்பூரில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும், இந்த முகாம் மூலம் 10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JOB ALERT
கல்வித்தகுதிகள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்ற அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் இல்லையென கூறப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருப்பூர் 0421-2999152, 94990 55944 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.