MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு குட் நியூஸ்.! நவம்பர் 15 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாணவர்களுக்கு குட் நியூஸ்.! நவம்பர் 15 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் விடுமுறைகளைக் கொண்டாடிய மாணவர்களுக்கு நவம்பர் மாதம் ஏமாற்றத்தைத் தந்தாலும், சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 10 2024, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விடுமுறை- மாணவர்கள் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும், அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடர் விடுமுறையால் மாணவர்கள் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக அயூத பூஜை, சரஸ்வரதி பூஜை, தீபாவளி என சுமார் 10 முதல் 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் விடுமுறை கிடைக்குமா என மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 

25

மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் விடுமுறை தினமே இல்லாத மாதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள்  உள்ளிட்ட முக்கிய தினங்களையொட்டி அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையானது விடப்படுகிறது.  ஒரு சில மாவட்டங்களில் விடப்படுகின்ற உள்ளூர் விடுமுறையால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  கந்த சஷ்டி திருவிழாவையொட்டி  முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.  
 

35
school holiday

school holiday

திருச்செந்தூர், திருவாரூர் விடுமுறை

சூரசம்ஹாரம் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.  ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

45
School Holidays

School Holidays

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை

இந்தநிலையில் மற்றொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எதிர்வரும் 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

55
school holiday

school holiday

நவம்பர் 23ஆம் தேதி பணி நாள்

இவ்விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வகையில் மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் 23.11.2024 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தேர்வு
பள்ளி
சென்னை
கல்வி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
Recommended image2
கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!
Recommended image3
போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved