MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களை அழ வைத்து அந்தர் பல்டி அடித்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?

மக்களை அழ வைத்து அந்தர் பல்டி அடித்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?

 ஒரு கிலோ 200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட தக்காளியானது படிப்படியாக வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒரு கிலோ 40 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தக்காளியை 2 அல்லது 3 கிலோ என வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 18 2023, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

உச்சத்தை தொட்ட தக்காளி விலை

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 5 கிலோ தக்காளி 50 ரூபாய் என்ற கணக்கில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் தக்காளி வீட்டிற்கு அள்ளி சென்றனர். இதனையடுத்து ஒரு சில நாட்களிலேயே தக்காளி விலை உச்சத்தை தொட ஆரம்பித்தது. ஒரு கிலோ 50 ரூபாய் என்ற நிலையை தொட்ட தக்காளி நாளுக்கு நாள் விலை அதிகரிக்க தொடங்கியது. அடுத்த சில நாட்களில் சதம் அடித்த தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இரட்டை சதம் அடித்து பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு வகைகள் தயாரிப்பதை தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்த போதும் பெரும்பாலான மக்களுக்கு நியாயவிலைக்கடை தக்காளி கிடைக்காத காரணத்தால் வெளி மார்க்கெட்டில் வாங்கினர். இந்தநிலையில் தான் தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டிய நிலையில் மாற்று பயிருக்கு சென்றதால் தக்காளி உற்பத்து குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.

33
Tomato price hike

Tomato price hike

மீண்டும் குறைந்த தக்காளி விலை

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள்தோறும 1000 முதல் 1100 டன் தக்காளி வரத்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 300 முதல் 400 டன் வரை மட்டுமே தக்காளி வந்தது. இத்ன காரணமாகவே தக்காளி விலை அதிகரித்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியானது படிப்படியாக குறைந்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக எண்ணிக்கை கணக்கில் தக்காளியை பொதுமக்கள் வாங்கிய நிலை மாறி கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இளைஞர்கள் திராவிட லட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் ! மு.க. ஸ்டாலின் பேச்சு
Recommended image2
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image3
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved