MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கமல் முதல் திருமாவளவன் வரை.. கடைசி வரை திக் திக் நிமிடங்கள்! நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட 5 விஐபிக்கள்!

கமல் முதல் திருமாவளவன் வரை.. கடைசி வரை திக் திக் நிமிடங்கள்! நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட 5 விஐபிக்கள்!

5 Shocking Narrow Margin Defeats in TN Election: தமிழக தேர்தல் வரலாற்றில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய 5 விஐபி வேட்பாளர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 22 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நூலிழையில் வெற்றியை இழந்த விஐபி வேட்பாளர்கள்
Image Credit : AI

நூலிழையில் வெற்றியை இழந்த விஐபி வேட்பாளர்கள்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. பொதுவாக தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் ஒரு ஆயுதம் என்பார்கள். ஏனெனில் ஒரு சில வாக்குகள் தான் ஒரு வேட்பாளரின் 5 ஆண்டு கால அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தமிழகத் தேர்தல் வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. கடந்த காலத் தேர்தல்களில், வெற்றியின் வாசல் வரை சென்று வெறும் சில நூறு வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட 5 முக்கிய விஐபி வேட்பாளர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த அப்பாவு
Image Credit : Asianet News

வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த அப்பாவு

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், திமுகவின் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட அப்பாவு, . தபால் வாக்குகளை சரியாக எண்ணவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுமார் 7 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடந்த நிலையில், பிப்ரவரி 2023‍ல் இன்பதுரை வெற்றி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு வலிமையானது என்பதற்கு இன்றும் இந்தத் தொகுதியே பெரும் உதாரணம் ஆகும்.

Related Articles

Related image1
2026 தமிழக தேர்தல் களம்.. ஆட்சியை தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்!
Related image2
5 தலைநகரங்கள்.. விவசாயிகளுக்கு அரசு ஊதியம்.. கல்வி, மருத்துவம் இலவசம்.. நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!
36
நூலிழையில் தோல்வியுற்ற திருமாவளவன்
Image Credit : google

நூலிழையில் தோல்வியுற்ற திருமாவளவன்

2016 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியைத் தழுவினார். இந்த தொகுதியில் முருகுமாறன் 48,450 வாக்குகளும், திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 2,376 வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

46
வானதியிடம் போராடி தோற்ற கமல்ஹாசன்
Image Credit : Getty

வானதியிடம் போராடி தோற்ற கமல்ஹாசன்

2021 தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்த்த தொகுதி கோவை தெற்கு. இந்த தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டார். பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்ற நிலையில், கடைசி வரை போராடிய கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

56
பெண் வேட்பாளரிடம் நெருங்கி வந்து தோல்வி கண்ட எல்.முருகன்
Image Credit : F/L.Murugan

பெண் வேட்பாளரிடம் நெருங்கி வந்து தோல்வி கண்ட எல்.முருகன்

2021 தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் அப்போதைய தமிழக பாஜக தலைவராகவும், இப்போதைய மத்திய அமைச்சராகவும் உள்ள எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் வெறும் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். கயல்விழி செல்வராஜ் 92,987 வாக்குகளும், எல். முருகன் 91,594 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

66
டாக்டர் கிருஷ்ணசாமி
Image Credit : Google

டாக்டர் கிருஷ்ணசாமி

2016 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனிடம் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
Recommended image2
Now Playing
சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
Recommended image3
Now Playing
மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
Related Stories
Recommended image1
2026 தமிழக தேர்தல் களம்.. ஆட்சியை தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்!
Recommended image2
5 தலைநகரங்கள்.. விவசாயிகளுக்கு அரசு ஊதியம்.. கல்வி, மருத்துவம் இலவசம்.. நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved