- Home
- Tamil Nadu News
- அதிகாலையிலேயே அலறிய உளுந்தூர்பேட்டை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலையா? தற்கொலையா?
அதிகாலையிலேயே அலறிய உளுந்தூர்பேட்டை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலையா? தற்கொலையா?
உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லை அல்லது வேறு காரணமா என்பது விசாரணையில் தெரியவரும்.

அதிகாலையிலேயே அலறிய உளுந்தூர்பேட்டை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை! என்ன காரணம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகரை சேர்ந்தவர் முத்து. இவர் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களது மகன் பிரவீன்குமார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள குளத்தில் முத்துவின் மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன்குமார் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்துள்ளனர்.
ஒரே குடும்படுத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
குளத்தில் அருகில் இருந்த மரத்தில் முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குளத்தில் மிதந்த தேவி மற்றும் பிரவீன்குமார் உடல்களை அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டனர். மேலும் மரத்தில் தொங்கிய முத்துவின் உடலும் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: 45 வயதில் இதெல்லாம் தேவையா? மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! மயிலாப்பூரை அதிர வைத்த சம்பவம்!
போலீஸ் விசாரணை
பின்னர் 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவில்லை. முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்பதால் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்! பதற்றத்தில் இபிஎஸ்!
உளுந்தூர்பேட்டை
மனைவி, மகனை கொலை செய்துவிட்டு முத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.