MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கூவி கூவி அழைத்தும் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்த மக்கள்.! இத்தனை லட்சம் பேரா.?

கூவி கூவி அழைத்தும் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்த மக்கள்.! இத்தனை லட்சம் பேரா.?

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். 2 கோடிக்கும் மேற்பட்டோர் பரிசுத் தொகுப்பைப் பெற்றுள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 26 2025, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pongal gift

pongal gift

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடிடும் வகையில் தமிழக அரசு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை, பச்சரிசி, சக்கரை, வெட்டி, சேலை மற்றும் முழு கரும்பு வழங்கப்படுகிறது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Pongal gift package

Pongal gift package

புறக்கணித்த மக்கள்

எனவே  இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் ரொக்கமாக பணம் வழங்காத காரணத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து 26லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆயிரம் ரூபாயை இல்லாததால் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்" எனவும்,

34
Pongal gift package

Pongal gift package

2கோடியே 21 லட்சம் மக்களுக்கு பரிசு தொகுப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.அதன்படி. கடந்த 09.01.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 

44
Tamil Nadu Pongal gift

Tamil Nadu Pongal gift

புறக்கணித்த 12 சதவிகித மக்கள்

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 25.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 94 லட்சத்து 15 ஆயிரத்து 346 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் ஒட்டு மொத்தமாக  தமிழ்நாடு முழுவதும் 88 சதவீதம் பேருக்கு நிறைவுபெற்றுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்  தெரிவித்துள்ளார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Now Playing
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
Recommended image3
Now Playing
'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved