- Home
- Sports
- GI-PKL 2025 தொடரில் அதிக புள்ளிகள் எடுத்து கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட டாப் 5 Successful Raiders!
GI-PKL 2025 தொடரில் அதிக புள்ளிகள் எடுத்து கொடுத்து வெற்றிக்கு வித்திட்ட டாப் 5 Successful Raiders!
Top 5 Successful Raiders in GIPKL 2025 : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025
Global Indian Pravasi Kabaddi League: முதல் குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் (GI-PKL) குருகிராமில் நேற்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில் ஆண்கள் அணியில் போஜ்புரி லெப்பர்ட்ஸ், ஹரியான்வி ஷார்க்ஸ், மராத்தி வல்ச்சர்ஸ், பஞ்சாபி டைகர்ஸ், தமிழ் லயன்ஸ், தெலுங்கு பாந்தர்ஸ் என்று மொத்தமாக 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இதே போன்று பெண்கள் தரப்பில் மராத்தி ஃபால்கன்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு சீட்டாஸ், தமிழ் லயனஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி ஈகிள்ஸ் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. நேற்று 3 போட்டிகள் நடைபெற்றது. இதில் முறையே பஞ்சாபி டைகர்ஸ், ஹரியான்வி ஷார்க்ஸ் மற்றும் மராத்தி வால்ச்சர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. இந்த அணிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டாப் 5 சக்ஸஸ்ஃபுல் ரைடர்ஸ் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
தமிழ் லயன்ஸ்
தமிழ் லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பஞ்சாபி டைகர்ஸ் அணி 33-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாபி டைகர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மிலன் தஹியா. இவருக்கு அடுத்ததாக உமேஷ் கில் இருந்தவர். இவர்கள் இருவரும் எடுத்துக் கொடுத்த அதிகப்படியான புள்ளிகள் காரணமாக பஞ்சாபி டைகர் எளிதில் வெற்றி பெற்றது.
மிலன் தஹியா:
மிலன் தஹியா (ரைடர்) தான் இந்த சீசனுக்கான ரைடை தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி தனது முதல் ரைடிலேயே முதல் புள்ளியையும் பெற்று கொடுத்தார். இவரது 7 Successful Raids மூலமாகவும் போனஸ் புள்ளிகள் மூலமாகவும் மொத்தமாக அணிக்கு 8 புள்ளிகள் பெற்று கொடுத்தார்.
உமேஷ் கில் (ரைடர்):
இவர் தனது வெற்றிகரமான ரைட்ஸ் மூலமாக 4 புள்ளிகளும், ஒரு டாக்கில் புள்ளிகளும் என்று மொத்தமாக 5 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். இவர்களது சிறப்பான ரைடு மூலமாக பஞ்சாபி டைகர்ஸ் அணியானது 33-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
அன்கித் ஹூடா (ரைடர்)
இதே போன்று ஹரியான்வி மற்றும் தெலுங்கு பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹரியான்வி 47-43 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. ஹரியான்வி அணியில் அன்கித் ஹூடா (ரைடர்) தனது சிறப்பான ரைடுகள் மூலமாக அணிக்கு அதிகமாக 11 புள்ளிகளும், டாக்கிலில் 3 புள்ளிகளும் என்று மொத்தமாக 14 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார்.
சந்தீப் கண்டோலா (கேப்டன்)
மேலும் அணியின் கேப்டனான சந்தீப் கண்டோலா 4 டைடு புள்ளிகள் மற்றும் 4 டாக்கில் புள்ளிகள் என்று மொத்தமாக 8 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார். இதன் மூலமாக ஹரியான்வி அணியானது 47 -43 என்று புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
சாஹில் பால்யன் (டிஃபெண்டர்)
இறுதியாக மராத்தி வால்ச்சர்ஸ் மற்றும் போஜ்புரி லிபார்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மராத்தி அணியானது 42-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சாஹில் பால்யன் (டிஃபெண்டர்). 8 வெற்றிகரமான டாக்கில் மூலமாக 11 புள்ளிகள் பெற்று அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.