Sandhya 1st Women Kabaddi Referee:தமிழகத்தின் முதல் பெண் கபடி நடுவர் யார் தெரியுமா?
கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் மீதும் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகமே கொண்டாடும் முதல் பெண் கபடி நடுவர் சந்தியா. புரோ கபடி லீக் தொடரில் தமிழகத்திலிருந்து கபடி நடுவராக பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சந்தியா.
Sandhya Tamilnadu 1st Women Kabaddi Referee
கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை. ஆனால், கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் மீதும் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹாக்கி, கபடி, பேட்மிண்டன், டென்னிஸ், கோ கோ, செஸ், ஈட்டி எறிதல், தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல் என்று ஏராளமான விளையாட்டுகள் மீதும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
Sandhya Tamilnadu 1st Women Kabaddi Referee
அதோடு, இந்த விளையாட்டுகளில் இடம் பெற்று விளையாடி பல சாதனைகளையும் படைக்கின்றனர். சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் உள்பட இந்தியா மொத்தமாக 6 பதக்கங்களை வென்றது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தமிழகமே கொண்டாடும் முதல் பெண் கபடி நடுவர் யார் தெரியுமா? அவர் தான் சந்தியா.
Sandhya Tamilnadu 1st Women Kabaddi Referee
புரோ கபடி லீக் தொடரில் தமிழகத்திலிருந்து கபடி நடுவராக பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சந்தியா. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. காமராஜர் மற்றும் கோடீஸ்வரி தம்பதிக்கு பிறந்த 3 பெண் குழந்தைகளில் சந்தியா தான் மூத்தவர்.
Sandhya Tamilnadu 1st Women Kabaddi Referee
ஒட்டு மொத்த குடும்பமே கபடி மீது ஆர்வம் கொண்டு கபாடி விளையாடியுள்ளது. ஆம், சந்தியா மட்டுமின்றி அவரது சகோதரிகளும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளனர். சந்தியா குடும்பம் தான் கபடி விளையாடுகிறது என்றால், அவரது காதல் கணவரும் கபடி வீரராம். ஆம், சந்தியாவின் காதல் கணவரான கதிரவன் தேசிய அளவில் கபடி வீரர்.
Sandhya Tamilnadu 1st Women Kabaddi Referee
பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் போது கபடி மீது ஆர்வம் ஏற்பட்டு கபடி விளையாட ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு பள்ளி அளவிலான கபடி அணியில் இடம் பெற்று விளையாடி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான கபடி போட்டிகள் வரையில் விளையாடி அசத்தியுள்ளார்.
1st Women Kabaddi Referee Tamilnadu
கதிரவனை திருமணம் செய்து கொண்ட பிறகு கபடிக்கு ஓய்வு அளித்த நிலையில் மீண்டும் 2015 ஆம் ஆண்டு விளையாட வந்துள்ளார். அப்போது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான தேசிய சீனியர் கபடி அணியில் இடம் பெற்று தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதோடு, அணியை காலி இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றுள்ளார்.
Sandhya 1st Women Kabaddi Referee
இதைத் தொடர்ந்து நடுவருக்கான பதவிக்கு பயிற்சி பெற்றார். 2018 ஆம் ஆண்டு புரோ கபடி லீக் தொடருக்கான நடுவர் தேர்வுக்கான தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதல் பெண் கபடி நடுவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.