MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL 2025: தோனி முதல் மொயின் அலி வரை! கடைசி ஐபிஎல் ஆடும் வீரர்கள் யார்? யார்?

IPL 2025: தோனி முதல் மொயின் அலி வரை! கடைசி ஐபிஎல் ஆடும் வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் 2025 சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற பல்வேறு வீரர்கள் முடிவு செய்துள்ளனர். ஐபிஎல்லுடன் ஓய்வுபெறும் வீரர்கள் குறித்து பார்க்கலாம்.  

2 Min read
Rayar r
Published : Mar 18 2025, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

IPL 2025: ஐபிஎல் என்னும் மெகா கிரிக்கெட் லீக்கில் பல சீனியர் ஸ்டார் பிளேயர்கள் ஆடுகிறார்கள். அவர்களின் வயதை பார்த்தால் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் உள்ளது. ஐபிஎல் 2025க்கு பிறகு இவர்கள் ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் உடன் ரிட்டயர் ஆகும் டாப்-5 ஸ்டார் பிளேயர்கள் குறித்து பார்க்கலாம். 

26
Mahendra Singh Dhoni

Mahendra Singh Dhoni

மகேந்திர சிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் 2025ல் ஆடும் அதிக வயது கொண்ட லெஜெண்டரி பிளேயர். தோனியின் தற்போதைய வயது 43. அவர் வயதை பொருட்படுத்தாமல் கிரவுண்டில் கலக்குவார். அதனால் அவர் ஆட்டத்திற்காக கிரிக்கெட் லவ்வர்ஸ் எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)க்கு ஐந்து ஐபிஎல் டைட்டில்களை அளித்த தோனி.. வரவிருக்கும் சீசனில் சிறப்பாக முடிக்க இலக்கு வைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஐபிஎல் 2024 அவருக்கு கடைசி சீசன் என்று அனைவரும் நினைத்தார்கள் ஆனால், மற்றொரு ஐபிஎல் சீசனுக்கு தயாராக உள்ளார். ஏற்கனவே தோனிக்கு ஐபிஎல் 2025 கடைசி சீசன் என்று பல ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன.

36
Ishant Sharma

Ishant Sharma

இஷாந்த் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)

ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஸ்டார் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா புதிய சாதனை படைத்தார். ஐபிஎல்  2008 ஏலம், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விற்பனையான ஒரே கிரிக்கெட்டர் ஆக வரலாறு படைத்தார். டெல்லி கேப்பிடல்ஸ் சார்பில் ஆடிய பிறகு, இஷாந்த் சர்மாவை குஜராத் டைட்டன்ஸ் ரூ.75 லட்சத்திற்கு வாங்கியது.

ஐபிஎல்லில் இஷாந்த் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் சார்பில் ஆடினார். அவர் வரும் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் சார்பில் ஆடவுள்ளார். ஐபிஎல் 2025 சர்மாவுக்கு கடைசி சீசன் என்று தகவல் வெளியாகி உள்ளது.

46
Faf du Plessis

Faf du Plessis

ஃபாஃப் டு பிளெசிஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸை டெல்லி கேப்பிடல்ஸ் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு வாங்கியது. 40 வயதுடைய டு பிளெசிஸ் ஐபிஎல்லில் இரண்டாவது பெரிய வயது கொண்ட ஆட்டக்காரராக உள்ளார். டாப் ஆர்டரில் இன்னும் டேஞ்சரஸ் பேட்டராக தொடர்கிறார். டு பிளெசிஸ் 145 ஐபிஎல் மேட்ச்களில் 4,571 ரன்கள் அடித்துள்ளார். டு பிளெசிஸ் நன்றாக விளையாடவில்லை என்றால் ஐபிஎல் 2025 அவர் கடைசி சீசனாக இருக்கலாம்.

'அனிமல்' ரன்பீர் கபூர் கெட்டப்பில் நடித்த தல தோனி! வியந்துபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ!

56
Karn Sharma

Karn Sharma

கரண் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)

இந்திய சீனியர் பிளேயர் கரண் சர்மாவை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது. 37 வயதில் ஐபிஎல் 2025ல் ஆடும் ஆறாவது பெரிய வயதுடைய கர்ண் சர்மா இதுவரை 84 மேட்ச்கள் ஆடி 350 ரன்கள் அடித்து 76 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் செயல்பாடு கர்ண் சர்மா எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. அவர் ரிட்டயர் ஆக வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. 
 

66
Moeen Ali

Moeen Ali

மொயின் அலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

இங்கிலாந்து டீம் ஸ்டார் ஆல் ரவுண்டர் மொயின் அலி ஐபிஎல் 2025 சீசனுக்காக தயாராக உள்ளார். 37 வயது கொண்ட அவர் ஐபிஎல்லில் 5வது பெரிய வயது பிளேயராக உள்ளார். மெகா ஏலத்தில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.2 கோடிக்கு வாங்கியது. மொயின் அலி எந்த அணி சார்பில் ஆடினாலும் நல்ல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். பேட்டிங், பௌலிங்கில் கலக்கும் மொயின் அலி மறுமுறை தன் பெஸ்ட்டை கொடுக்க தயாராக உள்ளார். 67 ஐபிஎல் மேட்ச்கள் ஆடிய அலி 1162 ரன்களுடன் 35 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

2027 உலகக்கோப்பைக்கு இந்தியா டார்கெட்! 9 'நான் ஸ்டாப்' ஓடிஐ சீரிஸ்! முழு அட்டவணை!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved