Dreams about flowers: மல்லிகை, சாமந்தி பூக்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..?
Dreams about flowers: தூங்கும் போது கனவில் பூக்கள் வருவது, இனி வரும் நாட்களில் நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையில் வருகிறதாம்.
நம்மில் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில கனவுகளை நாம் வேடிக்கையாக கடந்து செல்வோம். அதே நேரம், ஒரு சில விசித்திரமான கனவுகள் நம்மை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன என்று தெரியாமல் குழம்பி போய்விடுவோம்.
ஒரு சில கனவுகள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படிப்பட்ட கனவுகளில் ஒன்றுதான் பூக்கள். அதன் அழகும், மணமும் நம்மை எப்பொழுதும் நம்மை ஈர்க்கக்கூடியவை. அப்படி பூக்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதை தான் நாம் இந்தப் பதிவில் பரக்கப் போகிறோம்.
1. கனவில் பூக்களை காண்பது சந்தோஷம், மகிழ்ச்சி, திருப்தியான உணர்வு இவைகளை குறிக்கிறது. எனவே, பூக்களை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் பலவித நன்மைகள் உங்களுக்கு ஏற்படும்.
2. பூக்கள் பூத்து குலுங்குவது போல நீங்கள் கனவு கண்டால் அதனால் பல நல்ல பலன்கள் ஏற்படும் என அர்த்தம்.
3. அதிக அளவு வாசமுள்ள பூக்களை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கனவில் கண்டால் உங்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வருகிறது என அர்த்தம்.
ஒரு ரோஜா தோட்டத்தில் நீங்கள் இருப்பதை போல கனவு கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
4. மல்லிகை பூவை கனவில் கண்டால் மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால், மங்களம் நடைபெறும் என்று நம்முடைய வீட்டின் பெரியவர்கள் கூறுவார்கள்.
5. வெண்மை நிறம் கொண்ட பூக்கள், பூமாலை இவற்றை நீங்கள் மற்றவர்கள் கைகளில் இருந்து பெறுவது போல கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி காதில் விழும் என்று அர்த்தமாம்.
6. வெள்ளை தாமரையை கனவில் கண்டால், கல்வியின் கடவுளான சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
7. முல்லை பூவை கனவில் கண்டால்தாய் வழி உறவில் வேண்டிய உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தமாகும்.
8. பூக்கள் நிறைந்த மரம் அல்லது செடிகள் கனவில் வந்தால், எண்ணிய செயல்கள் நல்லபடியாக நிறைவேறும் என்று அர்த்தம்.
9. சாமந்தி பூவை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். அல்லி பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை வரப்போகிறது என்று உணர்த்துகிறது.
10. அல்லி பூவை திருமணமான ஆண்கள் உங்கள் கனவில் கண்டால் மனைவிவழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என அர்த்தம்.பன்னீர் பூவை கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
11. மருதாணி செடியை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக உங்களை வாட்டி கொண்டிருந்த நோய் நொடிகள் விலகி உடல் பலமடையும் என்று அர்த்தம்.
12. அதே நேரம், மலர்கள் வாடிப்போனது போல நீங்கள் கனவு கண்டால் விரைவில் நோய்கள் உங்களுக்கு வரும் என அர்த்தம்.