MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Astro tips: உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வர...இந்த மசாலா பொருட்களைக் கொண்டு பரிகாரம் செய்யுங்க..

Astro tips: உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வர...இந்த மசாலா பொருட்களைக் கொண்டு பரிகாரம் செய்யுங்க..

சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த மசாலாப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் வீட்டின் மகிழ்ச்சியை எவ்வாறு பராமரிப்பது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 08 2023, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பல நேரங்களில் சில ஜோதிட பரிகாரங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக நடத்தப்படுகிறது. அவ்வாறு செய்வது உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம். அத்தகைய ஒரு தீர்வு சில சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள். சமையலறை மசாலாப் பொருட்களில் சில மந்திர சக்திகள் உள்ளன. அவை உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமையலறையில் மசாலா வடிவில் இருக்கும் மஞ்சள் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டுவரும் மற்றும் கிராம்பு உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகளை அகற்ற உதவும். இதேபோல் பல, மசாலாப் பொருட்களின் பயன்பாடு பல வழிகளில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்திற்கு எப்படி சமையலறை மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..
 

27

திருமண தடைகள் நீக்க உதவும் மஞ்சள்:
உங்களது திருமணம் தாமதமாகிறது என்று நீங்கள் நினைத்தால், வியாழன் அன்று உங்கள் நெற்றியில் மஞ்சள் திலகம் தடவி, விஷ்ணுவுக்கு கணபதி,  அன்னை பார்வதிக்கும் மஞ்சளை அர்ச்சனை செய்து, சீக்கிரமாக திருமணம் ஆக  வேண்டும் என்று நினைத்து அவர்களை வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வியாழன் அன்றும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால்  உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

37

வீட்டின் பொருளாதார நிலையை சரிசெய்ய உதவும் பிரியாணி இலை:
பிரியாணி இலைகளால் வீட்டின் பொருளாதார நிலையை சரிசெய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா?. உங்கள் வீட்டில் காரணமின்றி நிதிப் பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒவ்வொரு சனிக்கிழமையன்று 5 பிரியாணி இலைகளை மற்றும் 5 மிளகு இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து  எரிக்கவும். அதன் புகை வீடு முழுவதும் பரவ விடிங்கள். இந்த பரிகாரத்தால் வீட்டில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். மேலும் உங்களுக்கு ஏற்படும் கெட்ட கனவுகளை விரட்ட நீங்கள் தூங்கும் இடத்தில் ஒரு பிரியாணி இலையை வைத்து தூங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் கெட்ட கனவுகளில் இருந்து விடுபடலாம்.

47

கண் குறைபாடுகள் நீக்க உதவும் சிவப்பு மிளகாய்:
சிவப்பு மிளகாய் தூள் கண் குறைபாடுகளை நீக்கும் சக்தி உள்ளது.
இதற்காக, நீங்கள் 7 சிவப்பு மிளகாயை எடுத்து, கண் பார்வையால் பாதிக்கப்பட்ட நபரின் தலைக்கு மேல் கடிகார திசையில் ஏழு முறை சுழற்றவும். அதன் பிறகு நீங்கள் அதை எதிர் கடிகார திசையில் சுழற்றுங்கள். அதன் பிறகு இந்த மிளகாயை தீயில் போடவும். இந்த பரிகாரம் மூலம் உங்கள் கண் குறைபாடுகளை விரைவில் போக்கலாம்.

57

வீட்டை உப்பால் சுத்திகரிக்கவும்:
உங்கள் வீட்டை நீங்கள் தண்ணீரால் துடைப்பதற்கு முன் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலைத்திருக்கும். மேலும் இதனால் உங்கல் வீடும் தூய்மையாகும்.

இதையும் படிங்க: லட்சுமி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும்!!

67

கருப்பு மிளகு மூலம் பணம் சம்பாதிக்கலாம்:
நீங்கள் பணத்தின் ஆதாரங்களை அதிகரிக்க விரும்பினால், கருப்பு மிளகில் ஒரு பரிகாரம் செய்யவும். அதற்கு, 7 கருமிளகாயை எடுத்து, வீட்டில் பணமளிக்கும் இடத்தில் வைக்கவும். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் செல்வம் கிடைக்கும். மேலும் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். 

மற்றொரு பரிகாரம்:

7 கருமிளகை எடுத்து, அதனை எரிக்கவும். பின் அந்த புகையை உங்கள் வீடு முழுவதும் பரவ விடுங்கள். இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் நிதிநிலை நன்றாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீங்கள் வீட்டில் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தினால், உங்கள் வீட்டில் எப்போதும் செழிப்பு நிலைத்து இருக்கும். மேலும் பொருளாதார நன்மைகளும் கிடைக்கும்.

77

எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும் கிராம்பு:
உங்கள் வீட்டில் சில அசம்பாவிதங்கள் மீண்டும் மீண்டும் நடந்தால், இதற்குக் காரணம் சில எதிர்மறை ஆற்றல்களின் வசிப்பிடமாக இருக்கலாம். இதற்கு செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பூரத்துடன் 5 கிராம்புகளை எரித்து அதன் புகை வீடு முழுவதும் பரவ விடுங்கள். இந்த பரிகாரம் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்றி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் உண்டாகும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: இன்று தொடங்கும் ஏழரை சனி.! பரிகார ராசிகள் எவை? சனியின் பிடியில் இருந்து தப்பிக்க உதவும் பரிகாரங்கள்.!
Recommended image2
தோல்வி நெருங்கும் நேரத்தில் செய்யக்கூடாத ஒரு தவறு… சாணக்கியர் எச்சரிக்கை
Recommended image3
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved