MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 10th Mar 2023:வீண் செலவு செய்யக்கூடாதது யார்? சாதிக்க முடியாததை சாதிக்கும் ராசிக்காரர் யார்..?

Today Rasipalan 10th Mar 2023:வீண் செலவு செய்யக்கூடாதது யார்? சாதிக்க முடியாததை சாதிக்கும் ராசிக்காரர் யார்..?

மார்ச் 10ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 10 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

குடும்பம் மற்றும் நிதி சார்ந்து நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பலனளிக்கும். வீடு, வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்திருங்கள். கற்பனையில் இருக்காமல் எதார்த்தவாதியாக இருங்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 
 

212

ரிஷபம்:

உங்கள் சுய ஆய்வுக்கான சரியான நேரம் இது. சாதிக்க முடியாத விஷயத்தை திடீரென சாதிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு கிடைக்கும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட்டில் கவனம் தேவை. தொழில் ரீதியான எந்த முக்கியமான முடிவையும் இன்று எடுக்க வேண்டாம்.
 

312

மிதுனம்:

அனுபவசாலி ஒருவருடனான சந்திப்பு உங்கள் சிந்தனை மற்றும் செயலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தேங்கிய வேலைகள் இன்று முடிவுக்கு வரும். உணர்ச்சிவசத்தை குறைக்கவும். அது உங்கள் மனதை பாதிக்கும். வேலையில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பொறுமையுடனும் நிதானத்துடனும் அதை கையாளவும். 
 

412

கடகம்:

வீட்டில் உள்ள மூத்தவர்களின் அறிவுரைப்படி நடந்தால் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இடமாற்றம் குறித்து யோசிப்பீர்கள். நேரத்தை வீணடிப்பதன் மூலம் முக்கியமான வேலை தடைபடும். எனவே முக்கியமான வேலையில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தில் வெளிநபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கிடுச்சு.. திடீர் பணமழை கொட்ட போகுது..!
 

512

சிம்மம்:

உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உரையாடல்களில் கோபத்தை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. கணவன் - மனைவி இடையே நல்ல உறவு இருக்கும். தோல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.
 

612

கன்னி:

உங்கள் பேச்சு மற்றும் செயலால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதாரத்தை வலுப்படுத்த சரியான நேரம். கடின உழைப்பின் மூலம் இலக்கை அடைவீர்கள். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். தொழிலில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம்.

712

துலாம்:

நேரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்துங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். சாமர்த்தியமான முடிவுகளை எடுப்பது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். அதிகமாக யோசித்து நல்ல வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். 

812

விருச்சிகம்:

நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். சுப நிகழ்வுக்கான அழைப்பிதழ் வரும். பொருளாதாரம் மந்தமாகவே இருக்கும். முதலீடுகள் மற்றும் பணப்பரிமாற்றத்தை தவிர்க்கவும். தொழில் ரீதியான இன்சூரன்ஸ் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
 

உங்க கைக்கு பணம் வந்த வேகத்தில்.. ஒன்னும் இல்லாமல் விரயமா போகுதா? அப்போ வீட்டில் இந்த தவறுகளை செய்யுறீங்களா?

912

தனுசு:

நிலம் அல்லது வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தொழிற்கல்வி மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நெருங்கிய உறவினருடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். உங்கள் ரகசியத்தை யாரிடமும் பகிர வேண்டாம்.
 

1012

மகரம்:

இன்று உங்களுக்கு மிக சாதகமான நாள். பொருளாதாரத்தில் செழிப்பான நாள். சோம்பல் தவிர்த்து இலக்கை நோக்கி கடுமையாக உழைக்கவும். குடும்பத்தில் நிலவிய பிரச்னை முடிவுக்கு வரும். வீண் செலவை தவிர்க்கவும்.  தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடுங்கள்.
 

1112

கும்பம்:

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்த வேண்டாம். விபத்துக்கான அபாயம் உள்ளது. 
 

1212

மீனம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை கலந்தாலோசித்து கவனமாக எடுக்கவும். கவனக்குறைவு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உங்கள் திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshaya Tritiya 2026: அக்ஷய திருதியை 2026-ல் தங்கம் வாங்க நல்ல நேரம் எது? இந்த நேரங்களில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் குவியுமாம்.!
Recommended image2
This Week Rasi palan (April 13 to 19) : இந்த வாரம் ராசியை மாற்றும் 3 முக்கிய கிரகங்கள்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 7 ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்.!
Recommended image3
அக்ஷய திருதியை: தங்கத்திற்கு பதில் இதை வாங்கினாலும் அதிர்ஷ்டம்தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved