- Home
- Spiritual
- சுவாமிக்கே திருமணம் நிச்சயம் செய்த திருத்தலம்! திருவேள்விக்குடிக்கு ஒருமுறை சென்றால் 90 நாட்களில் கெட்டிமேளம்
சுவாமிக்கே திருமணம் நிச்சயம் செய்த திருத்தலம்! திருவேள்விக்குடிக்கு ஒருமுறை சென்றால் 90 நாட்களில் கெட்டிமேளம்
கல்யாணம் எல்லாம் நடைபெறாமல் மன வேதனையில் இருப்பவர்களுக்கு இந்த கோயிலுக்கு ஒருமுறை வந்து சென்றால் கல்யாணம் நடந்து விடும். கோயிலின் மூலவர் தான் கல்யாண சுந்தரேஸ்வரர். இவருக்கே இந்த கோயிலுக்கு வந்து தான் கல்யாணம் ஆனதாக கூறப்படுகிறது.

சுவாமிக்கே திருமணம் நிச்சயம் செய்த திருத்தலம்! திருவேள்விக்குடிக்கு ஒருமுறை சென்றால் 90 நாட்களில் கெட்டிமேளம்
நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தால் ஒவ்வொரு ஜோசியக்காரர்களும் இந்த கோயிலையே முக்கியமாக சொல்வார்கள். கல்யாணம் எல்லாம் நடைபெறாமல் மன வேதனையில் இருப்பவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் இந்த கோயிலுக்கு ஒருமுறை வந்து சென்றால் கல்யாணம் நடந்து விடும் என்று புராணங்கள் கூறப்படுகிறது. கோயிலின் மூலவர் தான் கல்யாண சுந்தரேஸ்வரர் ஏஇவர் இந்த கோயிலுக்கு வந்து தான் கல்யாணம் ஆனதாகவும் கூறப்படுகிறது. நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு இந்த கோயிலுக்கு வந்து போவதன் மூலம் கல்யாணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திருவேள்விக்குடி சிவன்
திருவேள்விக்குடி சிவன் ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் அருகில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேஸ்வர்திருக்கோவில் ஆகும். இது திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலம் என்று பிரபலமானது, ஏனெனில் இங்குதான் சிவன் பார்வதி திருமணத்திற்கான வேள்வி நடைபெற்றது; எனவே, இது கௌதகேஸ்வரர், மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு வழிபடுவதால் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இறைவன் மற்றும் இறைவி: இந்த கோயிலில் இவர்களுக்கு திருமண வேள்வி நடைபெற்றதால் அதாவது திருமணத்திற்கான யாகம் அதைப் பற்றி திருமணம் நடந்ததால் இந்த கோவிலில் இவர்கள் கணவன் மனைவியாக அதாவது இறைவன் இறுதியாக காட்சியளிக்கின்றனர் . அவர்கள் யார் என்றால் எம்பெருமான் சிவனும் பார்வதியும் தான். இவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறைவன் பெயர் கல்யாண சுந்தர ீஸ்வரர் இறைவியின் பெயர் பரிமளசுகந்த நாயகி அழைக்கப்படுகிறார்.
திருவேள்விகுடி பெயர் வந்த காரணம்:
வரலாறு: அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட்டனர்.ஆதன் பிறகு பெண்ணின் உறவினர்கள் அரசகுமாரனுக்கு பெண் தர மறுத்து இத்திருமணத்தை நிறுத்திவிட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்றுபோன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டுவரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
உமாதேவி என்பவர் மனைவி பார்வதி.சிவபெருமானிடம் உமாதோவி அலட்சியமாக நடந்திருக்கிறார், அதனால் சிவபெருமான் கோபம்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ சாபமிட்டுள்ளார். அதனால் உமாதேவி பசு உருவம்க்கொண்டார். உமாதேவி தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்கசமயம் வரும்போது தோன்றி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கிறார் அதற்கு சிவபெருமானும் திருமணம் செய்துகொள்வேன் என்று வரமளித்தார். அதன்பிறகுஉமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருவம்க்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். சிவபெருமான் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான், அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.சுய உருவம் பெற்ற உமாதேவி சிவபெருமானை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து பூஜை செய்து வர 17-வது திங்கள்கிழமை சிவபெருமான் தோன்றி உமாதேவியை திருமணம் செய்துகொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி - சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியவை இத்தலத்தில்தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இன்று இன்று புராணங்களில் கூறப்படுகிறது இதன்படியே திருவேள்விகுடி பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய மூன்று ராஜ கோபுரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் அர்த்த நாரீஸ்வரர் ஒரு பக்கம் இறைவனும் ஒரு பக்கம் இறைவியும் இருக்கும் சிலை உள்ளது. இந்த கோயில்தான் இருந்ததாகவும் இவருக்கென்று தனி மண்டபத்தில் தனி சந்நிதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் பல கல்வெட்டுக்கள் இந்த கோயிலில் சிறப்புடையதாக இன்னும் நிலைத்து நிற்கின்றன. கோவிலின் தீர்த்தமான கௌதுகா பந்தன தீர்த்தம் நீரூற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது இதில் தான் அந்த அரசகுமாரனும் பெண்மணியும் நீராடிவிட்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருமணத்தடை நீங்குவதற்கான பரிகாரம்: கௌதகா பந்தன தீர்த்தம் நீரூற்றில் நீராடி வந்த பிறகு இறைவன் மற்றும் இறைவியை காண செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது ஏனென்றால் இவர்கள் இங்கு குளித்த பிறகு சாபங்கள் தீர்ந்து திருமணம் நடைபெற்றதாகவும் படுகிறது.
கண்ணாடி வளையல்கள் மாலையாக கோர்த்து கோயிலில் மூலவருக்கு அணிவது மூலம் திருமண தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கண்ணாடி வளையல்கள் மற்ற பெண்களுக்கு கொடுப்பதன் மூலமும் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.