- Home
- Spiritual
- செல்வத்தை அள்ளித்தரும் குந்த சதுர்த்தி! தை மாத வளர்பிறை சதுர்த்தியின் சிறப்புகளும் விரத முறைகளும்!
செல்வத்தை அள்ளித்தரும் குந்த சதுர்த்தி! தை மாத வளர்பிறை சதுர்த்தியின் சிறப்புகளும் விரத முறைகளும்!
Kunda Chaturthi Benefits in Tamil : தை அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி குந்த சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் விநாயகரை வழிபட கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

செல்வத்தை அள்ளித்தரும் குந்த சதுர்த்தி
ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை என்று முக்கியமான நாட்கள் வரும். ஆனால், இந்த தை அமாவாசைக்கு பிறகு வரக் கூடிய சதுர்த்தி ரொம்பவே விசேஷமான நாளாக கருதப்படுகிறது. ஆம், இன்று ஜனவரி 22ஆம் தேதி வியாழக்கிழமை வளர்பிறை சதுர்த்தி (வர சதுர்த்தி). தை அமாவாசைக்கு பிறகு வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தியானது குந்த சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. முகுந்த சதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது.
Ganesha worship after Thai Amavasya,
இந்த நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட வாழ்வில் உள்ள எல்லா கஷ்டங்கள் நீங்கும், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். துர்க்கையம்மன் பராசக்தியின் அம்சங்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆகையால் இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் துர்கா புத்ராய என்று அழைக்கப்படும் கணபதியை வழிபட வாழ்வில் எல்லா வளமும் நலமும் உண்டாகும்.
Kunda Chaturthi Significance, குந்த சதுர்த்தி மகிமை,
விநாயகருக்கு பிள்ளையார், கணபதி, ஆனைமுகன், கஜானனன், விக்னேஸ்வரன், ஏகதந்தன், சுமுகன், வக்ரதுண்டர், கபிலர், லம்போதரன், விக்னேசன் என்று பல பெயர்கள் உண்டு. மேலும், பராசக்திக்கு பிடித்த பிள்ளையாக இருப்பவர் தான் கணபதி. துர்கம் என்பதற்கு தாங்க முடியாத பொருள். அதன்படி, கணபதியை வழிபட நம்முடைய தீராத கஷ்டமும் தீரும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.
Thai Valarpirai Chaturthi 2026 மகா கணபதி சதுர்த்தி விரதம்,
பெரிய திருமேனி உடையவர். எட்டு கரங்களை கொண்டவர். வலது பக்கத்தில் உள்ள 4 கைகளில் கூரிய அங்குசம், ஜபமாலை, அம்பு மற்றும் ஒரு உடைந்த தந்தமும், இடது பக்கத்தில் உள்ள 4 கரங்களில் வில், நாவல் பழம் ஏந்துதல், பாசம், கற்பகக் கொடி என்று காட்சி தரும் விநாயகப் பெருமானை இந்த சதுர்த்தி நாளில் வழிபட்டு நம் கஷ்டங்களை நீக்குவோம்.