MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • அண்ணாமலையாரே நல்லபடியா வைப்பா.. தரிசித்த கையோடு குடும்பத்துடன் கிரிவலம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.!

அண்ணாமலையாரே நல்லபடியா வைப்பா.. தரிசித்த கையோடு குடும்பத்துடன் கிரிவலம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 11 2023, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். நேற்று முதல் நிகழ்வாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது சிவபெருமானின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. இங்கு உள்ள மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நானும் இந்த புனித தலத்தில் உள்ளதால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். காரணம் இது சிவனின் இடம். இந்த புனித தலத்திற்கு நான் வருவது இதுதான் முதல் முறை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சிவபெருமானின் அழைப்பு தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது என்றார். இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை. அசைவம் சாப்பிடுவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இதனை தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். இதனையடுத்து, சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உணவு பரிமாறினார். 

34

இரண்டாவது நாளான இன்று காலை 7 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

44

இதனைத் தொடர்ந்து 7.40 மணியளவில் ஆளுநர் ரவி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கிரிவலத்தை தொடங்கினார். கால்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் கிரிவலப் பாதை முழுவதும் நின்றிருந்த சாதுக்களை வணங்கியவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே கிரிவலம் வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் செங்கம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆளுநர் ஆர்.என். ரவி
திருவண்ணாமலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved