- Home
- Spiritual
- தப்பி தவறிக் கூட இந்த 4 இடங்களில் நின்று போட்டோ எடுத்துக்காதீங்க.! எதிர்மறை ஆற்றல் பிடித்துக் கொள்ளுமாம்.!
தப்பி தவறிக் கூட இந்த 4 இடங்களில் நின்று போட்டோ எடுத்துக்காதீங்க.! எதிர்மறை ஆற்றல் பிடித்துக் கொள்ளுமாம்.!
நாம் அனைவரும் எந்த இடங்களுக்கு சென்றாலும் அங்கு போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் ஆன்மீக ரீதியாக சில இடங்களில் இருந்து போட்டோ எடுக்கக்கூடாது என பரிந்துரைக்கப்படுகிறது.

புகைப்படம் எடுக்கக்கூடாத 4 இடங்கள்
ஆன்மீகத்தின் படி புகைப்படம் எடுப்பது தொடர்பாக சில இடங்களில் கட்டுப்பாடுகள் அல்லது தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மத, கலாச்சார, ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் புகைப்படம் எடுப்பது ஆன்மீக மரியாதையை பாதிக்கலாம் அல்லது எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தலாம். இந்த கட்டுரையில் ஆன்மீகத்தின் படி புகைப்படம் எடுக்கக் கூடாத இடங்கள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
கோயில் கருவறை
கோவில்களின் கருவறையில் மூலவர் சிலை அமர்ந்திருக்கும் இடம் மிகவும் புனிதமானது. இதை புகைப்படம் எடுப்பது பெரும்பாலான கோவில்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தெய்வத்தின் ஆன்மீக ஆற்றலை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. கருவறைக்கு முன்பாக புகைப்படம் எடுப்பது கருவறையில் உள்ள மூலவரை, சட்டைப் பையில் மறைத்து வைத்து புகைப்படம் எடுப்பது பக்தியின்மை மற்றும் மரியாதை குறைவாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் யாகம், ஹோமம், அபிஷேகம் போன்ற சடங்குகள் நடைபெறும் இடங்களில் புகைப்படம் எடுப்பது என்பது ஆன்மீக சக்தியை சிதறடிக்கும் என்று கருதப்படுகிறது. இது புனிதத்தை குறைப்பதாகவும், சடங்கின் கவனத்தை திசை திருப்ப கூடியதாகவும் உள்ளது.
மயானம்
சவக்கிடங்குகள் அல்லது மயானம் ஆகிய இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது ஆன்மீக ரீதியாக தவறு என கூறப்படுகிறது. இது மரணத்துடன் தொடர்புடைய இடங்கள் என்பதால், இங்கு சென்று புகைப்படம் எடுப்பது துரதிஷ்டத்தை தரும் என்றும், இறந்தவர்களின் ஆன்மாவை தொந்தரவு செய்யலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் மயானத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கலாம் என்றும், ஆன்மீக சமநிலையை பாதிக்கும் என்றும் மதங்களில் கூறப்படுகிறது. இந்து மதத்தில் உடல் எரியூட்டப்படும் இடங்களில் புகைப்படம் எடுப்பது மரியாதை குறைவாகவும், ஆன்மாவின் பயணத்திற்கு இடையூறாகவும் கருதப்படுகிறது.
கோபுரங்கள்
கோபுரங்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உடையவை. அதனால் தான் கோவில்களில், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் கோபுரங்கள் உயரமாகவும், கூம்பு வடிவிலும் வடிவமைக்கப்படுகின்றன. இது போன்ற இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உங்கள் சக்தியை உறிஞ்சுவது மட்டுமல்லாமல் எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. அதேபோல் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது அவர்களின் எதிர்மறை ஆற்றலை உங்கள் பக்கம் ஈர்க்கக்கூடும்.
லிப்ட் மற்றும் சுரங்கப்பாதை
சுரங்கப்பாதை அல்லது குகை நுழைவாயிலுக்கு அருகில் புகைப்படம் எதிர்ப்பது எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. இங்கு புகைப்படங்கள் எடுத்தால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்திலும் தாக்கம் ஏற்படலாம். அதேபோல் லிஃப்ட் மற்றும் பேஸ்மெண்ட் (தரைதளம்) போன்ற இடங்களில் புகைப்படம் எடுப்பது நல்லதல்ல. இது போன்ற இடங்களில் இருக்கும் எதிர்மறை சக்திகள் புகைப்படம் எடுப்பதன் மூலம் உங்கள் உடலில் நுழையலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற இடங்களில் நீங்கள் போட்டோ எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது உங்களின் மொபைலில் இருந்தால் உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.
(குறிப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பெறப்பட்ட பொதுவான தகவல்கள் மட்டுமே. விளைவுகள் மற்றும் நம்பகத் தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

