MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Sleeping direction: எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? வாஸ்து என்ன சொல்கிறது?! எந்த திசை ஆபத்து!!

Sleeping direction: எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? வாஸ்து என்ன சொல்கிறது?! எந்த திசை ஆபத்து!!

Sleeping direction: வாஸ்துசாஸ்திரத்தின்படி, எந்த திசையில் தலை, கால் வைத்து தூங்குவது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : maria pani
Published : Apr 25 2023, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் தூக்கம் அவசியமான ஒன்று. நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு சரியான தூக்கம் தேவைப்படுகிறது. குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான மனிதனுக்கு அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கம் எப்படி ஆரோக்கியத்துடன் தொடர்புடையதோ, அதேபோலவே வாஸ்துவில் நல்ல நிம்மதியான வாழ்க்கைக்கு நாம் படுத்து தூங்கும் திசை முக்கியமாக கருதப்படுகிறது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வாஸ்து சாஸ்திரங்களின்படி, நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நமது வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பது காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒருவருடைய குடும்பத்தில் நிம்மதியின்மை, ஒற்றுமையின்மை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்சினைகள் வருவதற்கு கூட அவர் தூங்கும் திசையும் காரணமாக உள்ளது என்கிறது வாஸ்து குறிப்புகள். வாஸ்துவின்படி தலை, கால்களை சரியான திசையில் வைத்து உறங்குவது நல்லது. எந்த திசையில் தூங்குவது சுபம், எது அசுபமானது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

35

தெற்கு திசையை நோக்கி பாதங்களை வைத்து தூங்குவதை வாஸ்து சாஸ்திரம் தவறு என சொல்கிறது. ஏனெனில் தெற்கு திசையில் தான் எமன் அல்லது எதிர்மறை சக்தி இருக்குதாம். ஆகவே இந்த திசையில் கால் வைத்து தூங்கக் கூடாது. இதே போலவே கிழக்கு நோக்கியும் கால்களை வைத்து உறங்கக்கூடாது. ஏனென்றால் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இந்த திசையில் கால்களை நீட்டினால் நமக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனால் வாழ்வில் மோசமான விளைவுகள் ஏற்படும். பயம், குழப்பம், கெட்ட கனவுகள் வருகிறதா? முதலில் தூங்கும் திசையை சரி பார்த்து கொள்ளுங்கள். 

45

வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு நோக்கி தலை வைத்து தூங்குவது ரொம்பவும் நல்லது. இதனால் உங்களுடைய வீட்டில் சந்தோஷம், செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும். மன நிம்மதி பெருகும். அதேபோலவே கிழக்கு திசை நோக்கி தலை வைத்து தூங்கும் போது வாழ்க்கை வளம் பெறும். தெற்கு திசையில் தலை வைத்து தூங்குபவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். வீட்டில் நிம்மதி இருக்கும். வாழ்க்கையிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி 2023... இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!! கூடவே நல்ல நேரமும் பொறக்க போகுது!!

55

தம்பதியரில் புதிதாக தொழில் தொடங்குவோர், மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் வெற்றியடைவார்கள். எப்போதும் கணவருடைய இடது பக்கத்தில் மனைவி தூங்குவது தான் நன்மை பயக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, குழந்தைகள் கிழக்கு திசை நோக்கி தலைவைத்து தூங்க வேண்டும். இது அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆற்றலை அவர்களுக்கு அளிக்கும். 

இதையும் படிங்க: சீக்கிரம் கடன் அடைபட! செவ்வாய்கிழமை இந்த எளிய பரிகாரம் செய்யுங்க! முருகபெருமான் உடனே உதவுவார்!

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: இனி பண கஷ்டமே வராது.! கோடீஸ்வரன் பட்டியலில் உங்க பேரு இருக்கும்.! சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 முக்கிய விதிகள்.!
Recommended image2
Navadurga Goddesses: நவராத்திரி 9 நாட்களும் வழிபட வேண்டிய தேவிகள் யார்? சைலபுத்ரி முதல் சித்திதாத்ரி வரை முழு விவரம்!
Recommended image3
Atrology: ஏழரையில் பொங்கு சனி & ராகு புத்தியில் புதன் திசை.! கோடிகளைக் குவிக்கப் போகும் 4 நட்சத்திரங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved