MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் கிடைக்கும்....உங்க ராசிக்கு இருக்கா?

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் கிடைக்கும்....உங்க ராசிக்கு இருக்கா?

மிதுன ராசிக்கு இன்று சுக்கிர பவான் பெயர்ச்சியாகுகிறார். அதுபோல சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மிகவும் நல்ல பலனை கொடுக்க உள்ளார்.

2 Min read
Author : Kalai Selvi
Published : May 02 2023, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சுக்ர பகவான் வசதி, ஆடம்பரம், இல்லற சுகம் உள்ளிட்ட விஷயங்களைத் தருபவர். இவர் மிதுனத்திற்கு இன்று (2.மே) பகல் 1.49 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவர் மே 30ஆம் தேதி வரை மிதுனத்தில் சஞ்சரிக்க உள்ளதால், தன்னுடைய பார்வை, கிரக கூட்டணிகளின் அடிப்படையில் சில ராசியினருக்கு பொருளாதாரம், வருமானத்தில் முன்னேற்றம், செயலில் வெற்றி மேல் வெற்றியைத் தருவார். எனவே சுக்கிரன், மிதுன ராசியில் சஞ்சரிக்கும் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

26

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல வகையில் மிகுந்த நற்பலன்கள் தருவார். இம்மாதம் முழுவதும் நீங்கள் சுற்றுலா, பொழுதுபோக்கு என உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மேலும் உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள் மற்றும் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகளை பெற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக உங்கள் உடன் பிறந்தவர்களின் உதவியோடு அப்பணத்தை சேமிக்கவும், செலவு செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
 

36

மிதுனம்:

மிதுனம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். மிதுனம் ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும் மற்றும் சொத்து வாங்கும் விஷயத்தில் இம்மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் மற்றும் பணம் சேரும் அதை சந்தோஷமாக செலவு பண்ண வாய்ப்பு கிடைக்கும்.

46

சிம்மம்:

சிம்மம் ராசியினருக்கு சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். உங்களது வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்நேரத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். மேலும் உங்கள் பிள்ளைகளிடமிருந்தும் சில நல்ல செய்தியும் கிடைக்கும். குறிப்பாக உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். 

56

துலாம்:

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதனால் உங்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். மேலும் 
உங்கள் மூதாதையர் சொத்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அது போல் பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் காரணமாக நல்ல
பலனைப் பெறுவீர்கள்.

66

மீனம்:

மீனம் ராசிக்காரர்கள் புதிய வாகனம், சொத்து முதலியவற்றை வாங்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கும். வியாபாரிகளுக்குச் சாதகமான காலம் என்பதால் நல்ல லாபம் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவும், உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil New Year: புத்தாண்டை இப்படித் தொடங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம்! கனி காணுதல் முதல் பச்சடி வரை.! தமிழ் புத்தாண்டின் சிறப்புகள்.!
Recommended image2
Akshaya Tritiya 2026: அக்ஷய திருதியை 2026-ல் தங்கம் வாங்க நல்ல நேரம் எது? இந்த நேரங்களில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் குவியுமாம்.!
Recommended image3
This Week Rasi palan (April 13 to 19) : இந்த வாரம் ராசியை மாற்றும் 3 முக்கிய கிரகங்கள்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 7 ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved