நம்ம கூடவே இருந்து குழி பறிக்கும், துரோகிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க..சரபேஸ்வரரை எப்படி வழிபட வேண்டும்
Sarabeswarar Pooja: நம் கூடவே இருந்து துரோகம் இழைக்கும் பகைவர்களை அழிக்க, சரபேஸ்வரரை எப்படி வழிபட வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
தீராத நோய்களையும், தொந்தரவு தரும் பகைவர்களையும் ஒரேயடியாக ஒளித்து கட்ட சரபேஸ்வரரை வணங்கினால் போதும். சிலர் நம்முடன் பழகிக் கொண்டே நமக்கு தீமை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை நம்மால் எளிதில் இனம் கண்டு விலக முடியாது. நமக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை தரைமட்டமாக்கவும், தீராத பிணிகளை ஒழிக்கவும் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
தீராத நோய்களையும், தொந்தரவு தரும் பகைவர்களையும் ஒரேயடியாக ஒளித்து கட்ட சரபேஸ்வரரை வணங்கினால் போதும். சிலர் நம்முடன் பழகிக் கொண்டே நமக்கு தீமை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை நம்மால் எளிதில் இனம் கண்டு விலக முடியாது. நமக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை தரைமட்டமாக்கவும், தீராத பிணிகளை ஒழிக்கவும் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
சரபேஸ்வரர் யார்?
கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பார் என கூறிய பிரகலாதனின் பக்திக்கும், இரணியன் வாங்கிய வரத்திற்கும் நரசிம்ம அவதாரத்தில் இரணிய கசிபு வதம் செய்யப்பட்டார். இந்த வதம் நடக்கும்போது அரக்கன் இரணியனின் ரத்தத்தை குடித்ததால் ஆக்ரோஷத்தில் இருந்தாராம் நரசிம்மர். அவரை அமைதிப்படுத்த தேவர்கள் சிவனின் அருளை நாடினர். அப்போது சிவபெருமான் சரபம் என்ற பறவை ரூபம் எடுத்து வந்தார். சரபம் என்பது 8 கால்கள் கொண்ட பறவை என்கிறார்கள். அதற்கு இருதலைகள் இருக்குமாம். சிவன் எடுத்த இந்த ரூபத்தை தான் சரபேஸ்வரர் என்கிறார்கள். சரபேஸ்வரர் அவதாரத்தில் நரசிம்மரை சிவன் சாந்தமாக்கினார் என்கிறது புராணம்.
சரபேஸ்வரர் அருள்..!
பகைவர்களை அழிக்க இவரை வழிபாடு செய்யலாம். நம்முடனே இருந்துகொண்டு நமக்கு துரோகம் செய்பவர்கள், சூழ்ச்சிகளில் நம்மை வீழ்த்துபவர்கள் ஆகியோரை எதிர்க்க சரபேஸ்வரர் வழிபாடு துணை செய்யும். கோயில்களில் சிங்கர் முகம், கால்கள், மனித உடலில் பொருந்திய இறக்கைகளுடன் ஆக்ரோஷமாக சரபேஸ்வரர் வீற்றிருப்பார்.
இதையும் படிங்க: திருப்பதிக்கு இந்த நாள்களில் சென்று வழிபட்டால்.. நமது வேண்டுதல்கள் தப்பாமல் நிறைவேறும் தெரியுமா?
அவரை வணங்காமல் வராதீர்கள். அவர் ஈசனின் ரூபம். பரிகாரம் செய்தும் நிவர்த்தி கிடைக்காத கஷ்டங்களுக்கு சரபேஸ்வரரை வணங்கினால் போதும். மருத்துவர்கள் கைவிரித்த நோய்கள் கூட இவரை வணங்கினால் நீங்குமாம். நம் குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் கெட்ட சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகிய பிரச்சனைகளை கூட சரபேஸ்வரர் வழிபாடு சரி செய்யும். நம் குடும்பத்திற்கு குலதெய்வம் எப்படி அரணாக இருந்து காப்பாரோ... அதைப் போல, சரபேஸ்வரர் தன்னில் தஞ்சம் அடைந்தவர்களை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுவித்து பாதுகாப்பார்.
சரபேஸ்வரருக்கு சொல்ல வேண்டிய மந்திரம்...
"ஓம்.. சாலுவேசாய வித்மஹே, பக்ஷிராஜாய தீமஹி.. தந்நோ சரப பிரசோதயாத்" எனும் மந்திரம் தான் சரபேஸ்வரருக்கு சொல்ல வேண்டிய காயத்திரி மந்திரம்.
துர்க்கை அம்மனும், காளி தேவியும் சரபேஸ்வர உருவத்தில் இருப்பார்கள். இவர் உக்கிரமான தெய்வம் என்பதால் வீட்டில் படமாக வைத்து வழிபாடு செய்ய முடியாது. கோயிலில் மட்டும் தான் வழிபாடு செய்ய முடியும். ஆனாலும் சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை மனமுருகி உச்சரித்து வந்தால் பலன் கிடைக்கும். அதிலும் ஞாயிறு அன்று வரும் ராகு காலத்தில் சரபேஸ்வர சந்நிதியில் நேரடியாக சென்று 11 நெய் தீபங்கள் வைத்து வழிபடலாம். இதனால் நாம் வேண்டுவது உடனே நடக்கும் என்பது ஐதீகம். பிறரால் வரும் எந்த கெடுதலும் நம்மை நெருங்காது.
இதையும் படிங்க: நாளை உகாதி பண்டிகை.. இதை மட்டுமே செய்தால் போதும்.. வறுமை நீங்கி வாழ்க்கை செழிப்பாக மாறும்..!