தோஷங்களை எரிக்கும் பொன்னேஸ்வரர்! பித்ரு தோஷ நிவர்த்தி தரும் பொன்னேஸ்வரமடம் திருத்தலம்!
Rahu Ketu Pariharam Ponneswarar Shiva Temple : சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது படுவதால், இது ஒரு 'பாஸ்கர க்ஷேத்திரம்' ஆகிறது. பித்ருக்களுக்கு அதிபதியான சூரியனின் ஒளி படும் தலம் என்பதால், இங்கு வேண்டிக்கொள்வது கூடுதல் பலன் தரும்.

Remedy for marriage delay and ancestral curse Tamil
பொன்னேஸ்வரர் கோயிலில் அழகிய மலை உள்ளது அந்த மலையில் கிரிவலம் செல்வதற்கு சிறந்த இடமாக உள்ளது அங்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கிரிவலம் செய்வார்கள். தற்போது தளபதி விஜய் கோயிலின் மலைக்கு கிரிவலம் செல்வதற்காக விளக்குகளால் ஒளிர வைத்துள்ளார். அது மேலும் கிரிவலம் செல்வதற்கு சிறந்ததாக விளங்குகிறது. பொன்னேஸ்வரர், வேதவல்லி இருவரையும் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருண தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது அது மட்டும் அல்லாமல் ராகு கேது பிரச்சனைக்கு இது ஒரு சிறந்த தலமாகவும் விளங்குகிறது ராகு கேது சென்னையில் இருப்பவர்களுக்கு இங்கு வழிபாடும் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
Ponneswaramadam Shiva Temple benefits
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெண்ணேஸ்வரர் கோயில், காவேரிப்பட்டணத்திற்கு அருகில் உள்ள பெண்ணேஸ்வரமடம் என்ற ஊரில் தென்பெண்ணை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும்; குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Pithru Dosha Nivarthi temples in Tamil Nadu
முதன்மைக் கடவுள் பென்னேஸ்வரர் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார்.இறைவி வேதநாயகி அல்லது வேதவல்லி இன்றும் சொல்லப்படுகிறது இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். பொன்னேஸ்வரர் மீது நேரடியாக சூரிய ஒளி படுகிறது இது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. பொன்னேஸ்வரர் கோயிலில் 7 நிலை நிலை ராஜகோபுரம் 110 உயரம் கொண்டது.
கோபுரம் தென் புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பெரிய கோபுரங்களில் ஒன்று ஆகும். கோபுரத்தின் வாயிலில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துவார பாலகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலில் இருந்து தெண்பெண்ணை ஆற்றுக்குச் செல்லபடித்துறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்கிழக்கில் ஒரு மண்டபம் உள்ளது, இது பதினாறாம் நூற்றாண்டில் வேலப்ப கந்தர் கந்தன் செட்டி என்பவரால் அமைக்கப்பட்டது.
Ponneswarar Temple Rahu Kethu Pariharam
இக்கோயில் இரு பிரகாரங்களைக் கொண்டதாக உள்ளது. முக மண்டபத்தின் வடக்கு உள் சுவரை ஒட்டி ஒரு பிள்ளையார் சிலை அமைந்துள்ளது இந்தப் பிள்ளையாரை பக்தர்கள் அதியமான் பிளைளாயார் என அழைக்கின்றனர். மேலும் முகமண்டபத்தில் நந்தி, பலிபீடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் ஒரு சிறிய சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் பிள்ளையார், சப்மதமாதர் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாது பிரகாரத்தில் ஒன்பது அறைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் ஒரு அறையில் இராமருடன், சீதை, இலக்குவன் ஆகியோருக்கு சிறிய கோயிலும் அடுத்த ஐந்து அறைகளில் லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அடுத்து வள்ளி தெய்வணையுடன் முருகர், அடுத்த அறையில் அம்மன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாது நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோட்ட தெய்வங்களாக தென்முகக் கடவுள், துர்கை உள்ளனர்.