MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Spiritual
  • Purattasi 2026 : புரட்டாசி 1 முதல் அமாவாசை வரை.. பெருமாளை வழிபடும் பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

Purattasi 2026 : புரட்டாசி 1 முதல் அமாவாசை வரை.. பெருமாளை வழிபடும் பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

Purattasi month: புரட்டாசி 1 எப்போது தொடங்குகிறது? புரட்டாசி மாதம் சிறப்புகள் என்ன? புரட்டாசி சனிக்கிழமைகள் ஏன் சிறப்பு? புரட்டாசி அமாவாசை எப்போது? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 16 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புரட்டாசி மாதம்
Image Credit : pinterest

புரட்டாசி மாதம்

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.பெருமாளை மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் மிகவும் முக்கியமான காலமாகும். “கோவிந்தா… கோவிந்தா” என்ற நாமம் ஒலிக்க, பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள், வழிபாடுகள் என ஆன்மிக சூழல் களைகட்டும். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது தமிழகத்தில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முக்கியமான ஆன்மிக மரபாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புரட்டாசி மாதம் சிறப்பு
Image Credit : pinterest

புரட்டாசி மாதம் சிறப்பு

புரட்டாசி மாதம் 1-ம் தேதி வருகிற செப்டம்பர் 18, (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்குகிறது. இந்து சமயத்தில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வைணவ மரபில், மகாவிஷ்ணு மற்றும் பெருமாளை வழிபடுவதற்கு இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த மாதம் முழுவதும் பல பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து, பெருமாள் நாமத்தைச் சொல்லி வழிபடுகின்றனர். வீட்டில் விளக்கேற்றி, துளசி வைத்து பெருமாளை வழிபடுதல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தல், கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தல் போன்றவை பக்தர்களால் மேற்கொள்ளப்படும் வழக்கமான வழிபாட்டு முறைகளாகும்.

Related Articles

Related image1
Astrology: பொன்னும் பொருளையும் கொடுக்கும் புரட்டாசி மாதம்.! எந்த ராசிக்கு எவ்ளோ தெரியுமா?
Related image2
Purattasi Perumal Yoga : ஆவணி-புரட்டாசி கிரக மாற்றம்! பெருமாளின் அருளால் 4 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி!
35
புரட்டாசி சனிக்கிழமைகள் ஏன் சிறப்பு?
Image Credit : pinterest

புரட்டாசி சனிக்கிழமைகள் ஏன் சிறப்பு?

குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பான நாட்களாக பல வைணவ பக்தர்களால் கருதப்படுகின்றன. இந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டைச் சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டில் மொத்தம் ஐந்து புரட்டாசி சனிக்கிழமைகள் வருகின்றன. முதல் சனிக்கிழமை செப்டம்பர் 19 அன்று வருகிறது.

45
சிறப்பு பூஜைகள்
Image Credit : pinterest

சிறப்பு பூஜைகள்

இந்த நாட்களில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், பிரசாத விநியோகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறலாம். பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதும் வழக்கம்.

வழிபாட்டின்போது துளசி இலைகளை பெருமாளுக்கு சமர்ப்பிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.மேலும், “ஓம் நமோ நாராயணாய” போன்ற விஷ்ணு நாமங்களைச் சொல்வது போன்ற வழிபாடுகளையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.

55
புரட்டாசி அமாவாசை எப்போது?
Image Credit : pinterest

புரட்டாசி அமாவாசை எப்போது?

2026 ஆம் ஆண்டின் புரட்டாசி மாத அமாவாசை அக்டோபர் 10 (சனிக்கிழமை) அன்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இந்த நாட்களில் முன்னோர்களை (பித்ருக்கள்) நினைத்து தர்ப்பணம், திதி கொடுத்து வழிபடுவது மரபு.

About the Author

V
Vishnupriya
ஆன்மீகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pooja lamp lighting: வீட்டில் விளக்கு ஏற்றும்போது செய்யக்கூடாத தவறுகள்..ஆன்மிக நம்பிக்கை சொல்வது என்ன?
Recommended image2
வைரலாகும் அம்பானி மருமகளின் நடனம்! ஏன் தெரியுமா?
Recommended image3
Spiritual Remedy: இனி கடனே இருக்காது.! எல்லா ரசிகளுக்கும் பரிகாரம் உண்டு.! எல்லா நட்சத்திரங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்!
Related Stories
Recommended image1
Astrology: பொன்னும் பொருளையும் கொடுக்கும் புரட்டாசி மாதம்.! எந்த ராசிக்கு எவ்ளோ தெரியுமா?
Recommended image2
Purattasi Perumal Yoga : ஆவணி-புரட்டாசி கிரக மாற்றம்! பெருமாளின் அருளால் 4 ராசிகளுக்கு அசுர வளர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved