- Home
- Spiritual
- வாழ்க்கையில் வெற்றிக்காகப் போராடுபவர்கள் செல்ல வேண்டிய சக்திவாய்ந்த டாப் 3 கோயில்கள் இதோ!
வாழ்க்கையில் வெற்றிக்காகப் போராடுபவர்கள் செல்ல வேண்டிய சக்திவாய்ந்த டாப் 3 கோயில்கள் இதோ!
Powerful Temples for Success in life : நீங்கள் ஒரு காரியத்திற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? வெற்றி உங்கள் பக்கம் வர எந்தக் கோயிலுக்குச் சென்று எப்படி வழிபட வேண்டும்? இதோ சில ரகசிய ஆன்மீகத் தலங்கள்

வாழ்க்கையில் வெற்றிக்காகப் போராடுபவர்கள் செல்ல வேண்டிய சக்திவாய்ந்த டாப் 3 கோயில்கள் இதோ!
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம், கிரக தோஷம் , நம்மில் மீது கோபம் கொண்டவர் பில்லி சூனியம் செய்திருந்தாலும் பலவகையான காரணங்கள் பிரச்சனைகள் வருவதற்கு அடிப்படையாக உள்ளன. பிரச்சனையே இல்லா விட்டாலும் அனைவருக்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ள ஏதாவது ஒரு கோரிக்கை, வேண்டுதல் இருக்கும். அப்படி பிரச்சனைகள் தீருவதற்கும், குடும்பத்தின் வெற்றிக்காகவும், தொழிலில் வெற்றி பெறுவதற்காகவும் , வேண்டியவைகள் இந்த கிடைப்பதற்கும் எந்த ஊரில் எந்த கோயிலை வழிபட்டு வந்தால் வெற்றி கிடைக்கும்
குன்றத்தூர் முருகன் கோயில்
முருகனின் கோவில்கள் தமிழ்நாட்டின் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் இருக்கும் முருகன்ஆலயமாகும். கோயிலுக்கு பெயர் குன்றத்தூர் முருகன் கோயில் குன்று இருக்கும் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான் பழமொழிக்கேற்ப மலை மீது அமர்ந்திருக்கிறார் முருகப்பெருமான்.
குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 84படிகள் ஏறிச்செல்ல வேண்டும். வழியில் இருக்கும் வலஞ்சுழி விநாயகர் நமது தடைகளை சுலபமாக விலக்கி அருள் புரியக்கூடியவர். அவரை அன்புடன் வணங்கிவிட்டு மேலே சென்றவுடன் கலைத்திறனுடன் அமைக்கப்பட்ட கொடி மரத்தை தரிசிக்கலாம். கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபட செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார் .
குன்றத்தூர்
குன்றத்தூர் முருகனை தரிசனம் செய்தால் நம் நினைத்த காரியம் வெற்றி பெறவும் குழந்தை பாக்கியம் பெறவும் தொழில்களில் வெற்றி பெறவும் எதிரிகள் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளவும் முருகனை தரிசிக்கலாம்.
2 . திருவண்ணாமலை:
திருவண்ணமாலை, அனைவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய அற்புதமான திருத்தலம். ஆன்மிக பூமியாகும். திருவண்ணாமலை செல்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் மட்டுமல்ல திருவண்ணாமலை என சொல்வதற்கும், சிந்திப்பதற்கும் கூட புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.
சிவபெருமானே மழையில் அமர்ந்து அண்ணாமலையாராக அனைவருக்கும் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம் போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சி அளிக்கிறார். சிறப்பு: அண்ணாமலையார் திருக்கோயிலில் கிரிவலம் சுற்றுவதற்கு மிக சிறப்பு வாய்ந்தது கிரிவலம் என்றாலே அது அண்ணாமலை கோயில் தான் என்று கூறப்படுகிறது நமது கெட்ட விஷயங்களையும் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கே இந்த கிரிவலம் செல்கின்றனர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் நிம்மதி கிடைப்பதற்கும் இந்த கோயில் சிறந்த திருத்தலமாக கருதப்படுகிறது.
3.சபரிமலை:
சபரிமலை, கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமியின் புகழ்பெற்ற கோவில்; இது உலகின் மிகப்பெரிய வருடாந்திர புனித யாத்திரை தலங்களில் ஒன்று, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிகின்றனர். சபரிமலையும் மலைமேல் ஏறும் கோயில் தான் மலை மேலே நம் பாவ கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அர்த்தம் என்று கூறப்படுகிறது.
மூலவராக இருக்கும் ஐயப்பன் சிறு வயது ஆன தோற்ற முடியாத காணப்படுவார். இவர் கட்ட பிரம்மச்சாரி என்பதால் ஒரு தனி சிறப்பு உள்ளது. ஒரு பிசினஸை தொடங்க வேண்டும் என்றாலும் இவரை போய் தரிசித்து வந்தால் அது மிகச் சிறப்பாகவே நடக்கும் அது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியமும் திருமண வாழ்க்கையும் நோய் நொடியேற்ற வாழ்க்கையும் ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்று கூறுவார்கள்.