- Home
- Spiritual
- தலையெழுத்தையே மாற்றும் ஒரு நாள் வழிபாடு; வற்றாத செல்வமும், மன அமைதியும் தரும் பௌர்ணமி விரதம்!
தலையெழுத்தையே மாற்றும் ஒரு நாள் வழிபாடு; வற்றாத செல்வமும், மன அமைதியும் தரும் பௌர்ணமி விரதம்!
Pournami Viratham Benefits in Tamil : பௌர்ணமி விரதம் இருப்பதன் மூலம் கிடைக்கும் ஆன்மீக நன்மைகள், விரத முறைகள் மற்றும் எந்த நேரத்தில் வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பது குறித்த விரிவான தொகுப்பு

Pournami Viratham Benefits in Tamil
பௌர்ணமி என்றாலே அது முழு நிலவு என்றே அர்த்தம். 30 நாட்களுக்கு ஒரு முறை நிலவு முழு நிலவாகும் அது பௌர்ணமி என்றும் அறநிலவாகும் போது அது அமாவாசை என்றும் கூறுவார்கள். நம் பௌர்ணமியை பக்திக்கு சிறந்த நாளாகவும் அமாவாசையை நம் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் கருதுவோம். முழு நிலவான பௌர்ணமி என்பது சந்திரன் என்று கூறப்படுகிறது இந்த சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் அதுதான் பௌர்ணமி அன்று கூறப்படுகிறது.
இந்த நாளில் பக்தியுடன், ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவதால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் , பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதே போல் பெளர்ணமி அன்று செய்யப்படும் வழிபாடுகள், பிரார்த்தனைகள் ஆகியன உடனடியாக பலன் தரக் கூடியவை என சொல்லப்படுகின்றன. 2026ம் ஆண்டில் வரக் கூடிய பெளர்ணமி விரதம் இருந்தால் அந்த சிவபெருமானின் அருள் தருகிறார். பௌர்ணமி விரதம் இருந்தால் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பௌர்ணமி விரதம்:
மிகவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு செய்து விரதம் இருந்தால் பெளர்ணமி வழிபாடும், பெளர்ணமி விரதமும். சிவ பெருமானுக்கு மட்டுமின்றி அம்மன், குலதெய்வம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, அவர்களின் அருளை பெறுவதற்கான நாளாகும். சாதாரண நாட்களை விட பெளர்ணமி தினத்தில் தெய்வ தரிசனம் செய்வதும், பூஜைகள் செய்வதும் பல மடங்கு அதிக பலனை தரும். பெளர்ணமியில் பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் வழிபாடு செய்து, சந்திரனை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதுனால் தெய்வீக அருள் கிடைப்பதுடன், நினைத்த காரியங்கள் நிறைவேறும். சந்திரனின் அருளும் கிடைக்கும்.
திருவண்ணாமலை கிரிவலம்:
பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை போன்ற ஆன்மீக சிறப்புமிக்க மலை கோவில்களில் கிரிவலம் வந்து வழிபடுவதால் பாவங்கள், முன்னோர்களில் இருந்து பெற்ற சாபம், அனைத்தும் நீங்கும். பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது, மற்ற நாட்களில் செல்லும் கிரிவலத்தை விட பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் ஆயிரம் மடங்கு அதிக பலன் கிடைக்கும். நோயற்ற வாழ்க்கை குறையாத செல்வமும் கிடைக்கும். அண்ணாமலையாராக அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
2026 இல் 12 மாத பௌர்ணமி விரதத்தின் பலன்:
தமிழ் வருடத்தில் மற்றும் 12 மாதங்கள் உள்ளன ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளை உடையது இந்த சிறப்புகள் கொண்ட மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் மேலும் சிறப்புகளை பெற்று அந்த சிவனின் அருள் நமக்கு கிடைப்பதற்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் ஒவ்வொரு மாதமாக பார்க்கலாம்.
சித்திரை : தமிழ் வருடங்களிலும் முதல் மாதமான சித்திரை மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நமக்கு உணவான தானியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Pournami Viratham Benefits in Tamil
வைகாசி: வைகாசி மாதம் திருமணத்திற்கும் சுப நிகழ்ச்சிக்கும் ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டியது என்றாலும் வைகாசி மாதமே நடைபெறும். அது மட்டுமல்ல வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதம் என்றும் கூறுவார்கள் ஏனென்றால் இதில் தான் வைகாசி விசாகம் வரும்.வைகாசி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் திருமணம் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆகையால் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் வைகாசி பௌர்ணமிக்கு விரதம் இருக்க வேண்டும்.
ஆனி: ஆனி மாசம் பௌர்ணமி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஆனி பௌர்ணமி நாளன்று விரதம் கடைபிடித்து வந்தால் நிச்சயமாக குழந்தை வாக்கியம் கிடைக்கும்.
Spiritual and Health benefits of Full Moon Fasting
ஆடி: ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த நாளாக கூறப்படுகிறது இந்த நாட்களில் அம்மனின் அருள் கிடைக்கும். ஆணியில் குழந்தை பாக்கியம் பெற்று ஆடியில் வளைகாப்பு போடுவது சிறப்பு .அம்மனுக்கு கூட ஆடி மாதம் முழுவதும் வளைகாப்பு செய்யப்பட்டு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஆடி பௌர்ணமி அன்று விரதம் இருந்தால் வளமும் நலமும் செல்வமும் பெற்று நலம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஆவணி: ஆவணி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் செல்வம் பெருகி வலியும் என்று கூறப்படுகிறது.
How to observe Pournami Viratham at home
புரட்டாசி: புரட்டாசி என்றாலே அது திருமாலுக்கு உகந்த மாதம் என்று நமக்கு தெரியும். புரட்டாசி முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருந்து வருவார்கள் அது மிகவும் சிறப்பு. அறிவியலின் முறைப்படி கூட புரட்டாசி மாதம் அதிகம் வெப்பம் நிகழ்வு கூடிய மாதமாக கருதப்படுகிறது அதனால் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நமது உடலுக்கு நலம் என்றும் அறிஞர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதம் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் நம்மிடம் லட்சுமி கடாட்சம் நிகழும்.அது மட்டுமல்லாமல் வீட்டிலும் லட்சுமி தங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐப்பசி: ஐப்பசி மாதம் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது இந்த மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் தானியம் பெருகி பசி மற்றும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
Pournami Girivalam Benefits Tamil
கார்த்திகை: கார்த்திகை என்றாலே அது முருகனையே குறிக்கும் கார்த்திகை ஒண்ணாம் தேதி அன்று முருகனுக்கு மாலை போடுதல் அது மட்டுமல்லாமல் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுதலும் மங்களகரமான மாதமாக இது கருதப்படுகிறது இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் வரும் அது திருவண்ணாமலை தீபத்தூரில் தீபம் ஏற்றப்படும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக தமிழ் வருடத்தில் கூறப்படும். இந்த மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் புகழும் பேரும் நிலைத்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது
மார்கழி: மார்கழி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் நமது ஆரோக்கியத்தில் ஏதேனும் நோயில் இருந்தால் அதில் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்தில் சிறப்படையும் என்று கருதப்படுகிறது.
Full Moon Fasting Benefits Astrology
தை: தை மாதம் என்பது விவசாயத்துக்குரிய மாதம் என்று கருதப்படும். தை முதல் நாளன்று தைப்பொங்கல் என்று நமக்கு அனைவருக்கும் தெரிந்தது. உடைக்காக காத்துக் கொண்டிருக்கும் நெற்பயிர்கள் அன்று அறுக்கப்பட்டு நமக்கு உணவாக வருகிறது இந்த சிறப்புமிக்க மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்து வந்தால் தேவையான அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது
மாசி: மாசி மாசத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நமது அனைத்து துன்பங்களும் விலகி நன்மைகளை கிடைக்கும்.
பங்குனி: பங்குனி மாதத்தில் பௌர்ணமி விரதம் இருந்தால் நம் மற்றவர்களுக்கு தர்மம் செய்ததற்கு பதில் அந்த பலன் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது