- Home
- Spiritual
- சந்திரனின் சாபம் தீர்த்த தலம்! தாமரைத் தண்டு லிங்கத்தை தரிசித்தால் கிடைக்கும் கோடான கோடி புண்ணியங்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த தலம்! தாமரைத் தண்டு லிங்கத்தை தரிசித்தால் கிடைக்கும் கோடான கோடி புண்ணியங்கள்!
Lotus stalk Lingam Moon curse remedy Tamil : சந்திரன் (சோமன்) தனது சாபம் நீங்க பெருமகளூர் ஈசனை வழிபட்டதால், சுவாமிக்கு 'சோமநாதர்' என்று பெயர் வந்தது. ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

சந்திரனின் சாபம் தீர்த்த தலம்
வரலாறு: பெருமகளூர் கிராமத்திலுள்ள குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதை அறிந்த மன்னன் நீரை வெளியேற்றும் போது, அடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியில் சிவலிங்கத்தை இறுக்கமாகக் கட்டித் தழுவி வணங்கினான். இதை அடுத்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி, "சோமநாதர்' என பெயர் சூட்டினார். லட்சுமி வாசம் செய்யும் தாமரை மலர்கள் பூத்த குளத்தில், லிங்கம் கிடைத்ததால், இந்த குளத்திற்கு லட்சுமி தீர்த்தம் என பெயர் சூட்டப் பட்டது. லிங்கம் சுயம்புலிங்கமாக உருவானது.
தாமரைத் தண்டு லிங்கத்தை தரிசித்தால் கிடைக்கும் கோடான கோடி புண்ணியங்கள்
அறிவியலுக்கு சவால் விடும் வகையில் நம் தமிழ்நாட்டில் சிவலிங்கம் தாமரை தண்டினால் உருவாகியுள்ளது இந்த அதிசயத்தை வேறுஎங்காவது நாம் பார்க்க முடியாது. சிவலிங்கம் உன் ஒன்று கல்லினால் உருவாக பட்டிருக்கும் இல்லையென்றால் களிமண்ணால் உருவாக்கப் பட்டிருக்கும் ஆனால் இங்கு அதிசயமாக தாமரை தண்டினால் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்பெருமகளூர் சோமநாதர் கோயிலில் தாமரைத் தண்டு லிங்கம் உள்ளது. இந்த இதன் சிறப்புகளையும் வரலாறுகளையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
Lotus stalk Lingam miracle
தீர்த்தத்தின் சிறப்பு: இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்த்ததிலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.
பலன்கள்: இந்த கோயில் சந்திர தோசத்திலிருந்து விலகுவதற்கு ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தீராத நோய் இருந்தால் கூட இந்த லட்சுமி தீர்த்தத்தில் நம் மீது பட்டால் விரைவில் குணமடையும் என்றும் கூறப்படுகிறது.