- Home
- Spiritual
- திருமணத் தடைகள் விலக வேண்டுமா? பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் சிறப்புகளும் பரிகாரங்களும்!
திருமணத் தடைகள் விலக வேண்டுமா? பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் சிறப்புகளும் பரிகாரங்களும்!
Patteeswaram Durga Amman Marriage Remedies Benefits : திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்வு அமைய பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு செய்ய வேண்டிய ராகு கால பூஜைகள் மற்றும் பரிகார முறைகளை இங்கே விரிவாகக் காணலாம்

Patteeswaram Durga Amman Marriage Remedies Benefits
கும்பகோணம் அருகே அமைந்துள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில், தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் புகழ்பெற்ற அம்மன் தலம். இங்கு துர்க்கை அம்மன் சாந்த சொரூபியாக, மகிஷன் தலைமீது நின்று, திரிபங்க போஸில் 8 கரங்களுடன் காட்சி தருகிறார். மிகப் பழமையான கோயில் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பாடப்பட்ட திருத்தலம் என்று கூறப்படுகிறது.
Durga Amman Temple Patteeswaram
வேத காலத்தில் பார்வதி தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தாள். அவள் இந்த இடத்தில் வந்து தனிமையில் தவம் இருக்கத் துவங்கியபோது அவளுக்கு உதவுவதற்காக தேவேர்கள் அந்த இடத்தில் மரம், செடிகள், கொடிகள் என அமைத்து வனபிரதேசமாக அதை ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவியாக இருக்க காமதேனு தனது பெண்ணான பட்டியையும் அனுப்பி வைத்தது. பார்வதி நின்று கொண்டே பரமேஸ்வரரை நினைத்து தவம் இருந்தாள். பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவனார் அவள் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கேயே துர்கையாக இருந்து கொண்டு மக்களின் துயரங்களை துடைத்து அருளுமாறு கூறினார்.
Marriage Obstacles Remedies in Tamil
இங்கு நீ வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற பூமி ஆனது. நீ செய்துள்ள தவத்தினால் உனது சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது இது. இந்த இடமே அனைத்து தேவர்களாலும் உனக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று. இந்த இடத்தில் பெற்றுள்ளாய். அதனால்தான் ராமரும் இங்கு வந்து என்னை பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார். இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைந்து கொண்டு இருப்பாய். இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே என்னுள் பாதியாக உள்ள உனக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமைந்து இருக்கும். ” எனக் கூறினார்.
துர்க்கை அம்மனின் ராஜ்ஜியம்:
துர்க்கை அம்மன் மகிஷாசுரன் தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகள் மற்றும் நான்கு கண்களையும் கொண்டு காட்சி தருகிறாள். அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை மற்றொரு கையில் கேடயம் கொண்டு காட்சி தருபவள் எப்போதுமே ஒன்பது கஜப் புடவையுடனே காட்சி அளிக்கின்றாள்.
ராகு பகவானுக்கு அன்னையாக விளங்கும் துர்க்கை அம்மன்:
ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம். ஆகவே ராகு பகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான் அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றார். அதனால்தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகும். அத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் நம் காவல் தெய்வமாக இருக்கும் துர்க்கைஅம்மன் மிகுந்த சிறப்பாக இக்கோயிலில் விளங்குகின்றார்.
பலன்கள்:
ராகு தோசத்திலிருந்து விடுபட துர்க்கை அம்மனை தரிசித்தால் அதுவும் ராகு காலத்தில் வந்து தரிசித்தால் விரைவில் ராகு தோசத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு இங்கு வந்து திருக்கைமணி தரிசித்துச் சென்றால் விரைவில் விலகும் என்றும் சொல்லப்படுகிறது இங்கு ராகு , செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமும் செய்யப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. திருமணத்தடை இருப்பவர்களுக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையை மன நிம்மதி தீராத நோய்களும் ஒரு எலுமிச்சை மாலை மூலம் இங்கு தீர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.