MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உங்க உள்ளங்கையில் இப்படி 1 ரேகை இருக்கா? இது தான் அதிர்ஷ்ட ரேகை... லட்சத்தில் ஒருத்தருக்கு தான் இருக்கும்..!

உங்க உள்ளங்கையில் இப்படி 1 ரேகை இருக்கா? இது தான் அதிர்ஷ்ட ரேகை... லட்சத்தில் ஒருத்தருக்கு தான் இருக்கும்..!

கைரேகையில், ஒரு நபரின் எதிர்காலத்தை கணிப்பது தான் ஜோதிடம். உங்களுடைய உள்ளங்கையில் உள்ள கோடுகள், வடிவங்கள், குறிகள் மூலம் தான் அது மதிப்பிடப்படுகிறது. சிலருடைய கைகளில் உள்ள அடையாளங்கள் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைக் கூறுகின்றன.  

2 Min read
Author : maria pani
| Updated : Mar 27 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

எல்லோருக்கும் ஒரே மாதிரியான கைரேகைகள் அமைவதில்லை. அதனால் தான் கைகளில் விதி இருப்பதாக ஜோதிடம் சொல்கிறது. நம்முடைய எதிர்காலத்தின் கண்ணாடியாக நம் கைகள் உள்ளன. கைகளில் உள்ள சில ரேகைகள் காதல் வாழ்க்கையைக் குறிக்கின்றன. மற்றவை நம் ஆயுளை குறிக்கின்றன. உள்ளங்கையில் ரேகை மட்டுமல்லாமல், முக்கியமான சில அடையாளங்களும் உள்ளன. இந்த அறிகுறிகள் அனைவருக்கும் கிடைக்காது, ஏனெனில் அந்த அறிகுறி உள்ளவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். உங்கள் கைகளில் இதுபோன்ற அதிர்ஷ்ட அறிகுறிகள் உள்ளதா? என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பதிவுக்குள் செல்லும் முன்னர் எந்தெந்த ரேகைகள் எது என்று அறிந்து கொள்வது அவசியம். அந்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். அப்பல்லோ என்றால் சூரிய ரேகை (apollo), சனி ரேகை (saturn line), தலை ரேகை (head line), ஆயுள் ரேகை (life line), விதி ரேகை (fate line), புதன் ரேகை (mercury line), வியாழன் ரேகை (jupiter line). 

37

விதி ரேகை  

உங்கள் உள்ளங்கையில் இருந்து நடுவிரலை நோக்கி செல்லும் ரேகை விதி ரேகை என்று அழைக்கப்படுகிறது. உங்கள் கையின் தலை ரேகை, வேறு சில ரேகைகளின் குறுக்குவெட்டு மூலம் உங்கள் கையில் ஒரு முக்கோணம் உருவாவதைக் கண்டால், அது உங்களுக்கு எல்லா தொழில்களிலும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த முக்கோணம் இருப்பவர்கள், எந்த பாதையில் சென்றாலும், புகழ், செழிப்பு அவர்களுடன் இருக்குமாம். . 

47

பதக்க ரேகை (கொடி சின்னம்)
ஒரு நபரின் உள்ளங்கையில், தலை ரேகை, அல்லது ஆயுள் ரேகையில் இருந்து வெளிவரும் நேர்கோட்டினால் உருவாகும் பதக்க ரேகை கொண்டவர்கள் புகழுடையவர்களாக இருப்பார்கள். அது கொடி சின்னம் என்று அழைக்கப்படுகிறது. கையில் இத்தகைய ரேகைகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த மக்கள் வாழ்க்கையில் மரியாதையுடன் பெரும் தொகையைப் பெறுகிறார்கள். 50 வயதிற்குப் பிறகு, அத்தகையவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும்.

57

வள்ளல்  

உள்ளங்கையில் கேது அல்லது சந்திரனின் மேட்டில் மீன் குறி இருப்பது மிகவும் மங்களகரமானது. இந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வளமானவர்களாகவும், அதிக மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பூஜை, தர்மம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

67

செல்வத்தின் சின்னம் 

உங்கள் உள்ளங்கையில் வியாழன் அல்லது புதன் மேட்டில் ஸ்வஸ்திகா சின்னம் (卐) இருந்தால், நீங்கள் மிகவும் பணக்காரர்களாக இருப்பீர்கள். பணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. அதனால் தர்மத்திற்காக செலவு செய்ய தயங்க வேண்டாம். 

இதையும் படிங்க: பணக்கஷ்டம், வாழ்க்கையில் அடிமேல் அடி விழுதா? வீட்டு கிழக்கு திசைல இத வச்சிருக்கீங்களா பாருங்க!

77

காந்த ஆளுமை 

உங்கள் கையைப் பாருங்கள். கட்டைவிரலின் முதல் வரிசையில் கோதுமை மாதிரியான தானிய வடிவ சின்னம் இருந்தால், உங்கள் மீது மற்றவர்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். 

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை தான்.! ஏப்ரல் மாதம் வந்தால் டாப் லெவலுக்கு போய்டுவாங்க.!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amazing Facts: இடி இடிக்கும்போது அர்ஜுனா, அர்ஜுனா-ன்னு ஏன் சொல்றோம்.? இதுதான் காரணம்.!
Recommended image2
Evil Eye : கண் திருஷ்டியால் வீட்டில் கெட்டது நடக்குதா? இந்த 4 பரிகாரங்களை செய்து பாருங்க!
Recommended image3
Viral Video: பணத்தை பிரசாதமாக தரும் கருப்பசாமி! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved