MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சென்னைக்கு அருகில் இப்படியொரு கோயிலா? பக்தர்களை வியக்க வைக்கும் முருகப் பெருமான் - ஒருமுறை போனால் விதியையே மாற்றும் தலம்!

சென்னைக்கு அருகில் இப்படியொரு கோயிலா? பக்தர்களை வியக்க வைக்கும் முருகப் பெருமான் - ஒருமுறை போனால் விதியையே மாற்றும் தலம்!

Nadupalani Murugan Temple History in Tamil : 300 அடி உயரம் கொண்ட முருகன் கோயில். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த முருகன் கோயில் தான் நடு பழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோவில்.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Jan 07 2026, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nadupalani Dandayuthapani Murugan கோயில் அமைவிடம்:
Image Credit : Facebook

Nadupalani Dandayuthapani Murugan - கோயில் அமைவிடம்:

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா பெருங் கரணை என்னும் கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே அமைந்துள்ளது.இந்த நாடு பழனி கோயில் ஒரு மலைக்கோயில் ஆகும். அடிவாரத்தில் 45 அடி உயரத்தில் முருகன் வேல் புடித்து மயில் துணை கொண்டு நிற்று வரும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். முருகனின் பொற்பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக்கு அந்த அழகு சமர்ப்பணம்.

26
மலையின் அமைப்பு:
Image Credit : Facebook

மலையின் அமைப்பு:

மேற்கு பக்கத்தை நோக்கி அமைந்துள்ளது மலை சுமார் 300 அடி உயரம் கொண்ட நடு பழனி மலையாகும். மழையில் ஏறுவதற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்கு 128 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் வாகனங்கள் மலை மீது ஏறுவதற்கு சருகலான பாதையும் உள்ளது. அது மூலமும் நடு பழனி மலையின் மீது ஏறலாம்.

முருகனின் தரிசனம்: 

120 படிக்கட்டுகளை ஏறி சென்ற பிறகு முருகன் மயில் தோகை விரித்திருக்க பாம்புகள் சூழ்ந்து இருக்க மரகத கண்களால் உருவாகியுள்ளார் முருகப்பெருமான். வள்ளி மற்றும் தெய்வானை இருபுறமும் அமர்ந்துள்ளனர் அதை பார்க்கும் அழகு கண் போதவில்லை என்றே கூறலாம். இந்த கோயிலின் சிறப்பு மரகத கல் என்று கூறப்படுகிறது மனதிற்கு சந்தோசத்தையும் மன நிம்மதியும் அளிக்கிறது.

36
கோயிலின் மற்ற சிறப்பு:
Image Credit : Facebook

கோயிலின் மற்ற சிறப்பு:

மலேசியாவில் இருக்கும் முருகன் சிலை போலவே , 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான இருந்த முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது. சற்று மேலே இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.அவரைகடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு பக்கமாக காட்சி தருகின்றது. 

கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் அமைந்துள்ளது. சுற்றி நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு பக்கமாக காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. 

மலை அடிவாரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார்.அதற்கு பிறகு அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.

46
Best Murugan Temples on East Coast Road
Image Credit : Facebook

Best Murugan Temples on East Coast Road

நடு பழனி திருக்கோவிலுக்கு சென்றால் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் கூறப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கோயிலின் சிறப்பு விழாக்கள்: இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.

56
கோயிலின் வரலாறு:
Image Credit : Facebook

கோயிலின் வரலாறு:

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் தீராத பக்தர் அவர் ஒருநாள் முருகனின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிரபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.

அங்கு அவர் தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான் பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, அச்சிரபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தர். செடிகள், பாறைக் கற்களைச் சரிசெய்து சுத்தம் செய்து அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபட செய்தார். அதன் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு கல்லாலான ஒரு கோயிலை அமைத்து அதனுள் மரகத சிலையான முருகப்பெருமானை அமைத்து கோயிலை உருவாக்கியுள்ள முத்து சுவாமி சித்தர்.

66
Nadupalani Temple Timings and Location
Image Credit : Facebook

Nadupalani Temple Timings and Location

ஒருநாள் கோயிலுக்கு முத்துசுவாமி சித்தர் வருகை தந்திருக்கிறார் அவருக்கு முருகன் பழனியில் உள்ள தண்டாயுதபாணி உருவத்தில் காட்சியளித்திருக்கிறார். அதற்குப் பிறகு அந்த தளத்திற்கு நடுபலன் என்று முத்துசுவாமி சித்தர் பெயர் வைத்திருக்கிறார் இவருக்கு காஞ்சி பெரியவர் என்றும் மறு பெயர் உண்டு. இப்படியே இந்த கோயில் உருவானது என்று கூறப்படுகிறது. குறை இல்லாத பிரச்சனைகளும், தீராத நோயுடன் வந்த பக்தர்களுக்கு இவர் திருநீரை அவர்களுக்கு கொடுத்து அவர்களது குறைகளை தீர்த்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பிடித்த வேலை உடனே கிடைக்கனுமா.?! நீங்க செய்ய வேண்டிய வழிபாடு இதுதான்.!
Recommended image2
Spiritual: உங்கள் காதலை நிறைவேற்றும் 3 பரிகாரங்கள்.! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
Recommended image3
Spiritual: நிச்சயம் பலன் தரும் வெற்றிலை ஜோதிடம்.! இழந்த சொத்துக்களை மீட்கும் அந்த "மேஜிக்" பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved