மகாளய பட்ச நாட்களில் ஆண்கள் தவறுதலாக கூட செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன?
பித்ரு பக்ஷம் என்பது நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு உரிய காலமாகும். இந்த காலக்கட்டத்தில் தங்களின் முன்னோர்களை அவர்கலின் சந்ததிகள் திருப்திப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த பித்ரு பக்ஷ காலத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Mahalaya Paksha 2024
மஹாலய பட்சம் அல்லது பித்ரு பக்ஷம் என்பது நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு உரிய காலமாகும். இந்த பித்ரு பக்ஷ காலக்கட்டத்தில் நம் முன்னோர்கள் பூமிக்கு வருகை தருகிறார்கள் என்பது ஐதீகம். இந்த காலக்கட்டத்தில் தங்களின் முன்னோர்களை அவர்கலின் சந்ததிகள் திருப்திப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு இன்று முதல் அதாவது செப்டம்பர் 18-ம் தேதி பித்ரு பக்ஷம் தொடங்க உள்ளது. அக்டோபர் 03-ம் தேதி வரை பித்ரு பக்ஷ காலமாகும். இந்த 16 நாட்களிலும் தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களின் ஆசியை பெற விரும்புகின்றனர்.
Mahalaya Paksha 2024
பொதுவாக, பித்ருக்களின் ஆசி இருந்தால் மட்டுமே, பரம்பரை வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பிற தடைகளைத் தவிர்க்க முடியும் என்பது நம்பிக்கை. எனவே அவர்களை சமாதானப்படுத்த இந்த பித்ரு பக்ஷ காலத்தில் சில சடங்குகள் செய்யப்படுகின்றன, காகத்திற்கு உணவு வைப்பது, பிராமணர்களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது,
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என செயல்கள் பின்பற்றப்படுகிறது. இந்த பித்ரு பக்ஷ காலத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முன்னோர்களின் சாந்தப்படுத்தவும், அவர்களின் ஆசியை பெற என்னென்ன செய்ய வேண்டும்?
பித்ரு தர்ப்பணம் செய்தல்: முன்னோர்களுக்கு நீர் மற்றும் எள் பிரசாதம் வழங்கும் சடங்கு. ஒருவேளை சிலரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும். அவர்கள் தங்கள் முன்னோர்கள் முக்தி அடைய உதவும் உணவை வழங்க வேண்டும்.
Mahalaya Paksha 2024
புனித நீராடுதல் : இந்த நேரத்தில் கங்கை நதியில் நீராடுவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பசுக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளித்தல்: இந்த விலங்குகளுக்கு உணவு வழங்குவது பெரும் புண்ணியத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.
தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தல் : உணவு இல்லாமல் தவிக்கும் எளியோருக்கு உணவு வழங்குவது புண்ணியத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. பிராமணர்களை உணவுக்காக அழைப்பதும், ஆடைகள் வழங்குவதும்:
பிராமணர்களுக்கு விருந்தளிப்பதும், அவர்களுக்கு உணவு, உடை, தக்ஷிணை வழங்குவதும் ஒரு புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது. பித்ரு பக்ஷ சில விஷயங்களை செய்யவே கூடாது என்று கூறப்படுகிறது.
தாமசிக் உணவுகளைத் தவிர்த்தல்: பித்ரு பக்ஷத்தின் போது அசைவ மற்றும் வெங்காயம், பூண்டு ஆகிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பிரம்மச்சரியத்தை பேணுதல்: வருகை தரும் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாலியல் செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். புதிய பொருட்களை வாங்குவதை தவிர்த்தல் : இந்த நாட்களில் புதிய ஆடைகள், காலணிகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் வாங்குவதை ஊக்கப்படுத்த வேண்டாம்.
Mahalaya Paksha 2024
கிரகபிரவேசம் : இந்த காலக்கட்டத்தில் புதிய வீட்டிற்குச் செல்வது அல்லது கிரக பிரவேச விழா நடத்தக்கூடாது. மதுபானம் மற்றும் சூதாட்டத்தை தவிர்த்தல் : இந்த காலகட்டத்தில் மது அருந்துதல் அல்லது சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவது அனுமதிக்கப்படாது.
கோவில்களில் இருந்து விலகி இருப்பது: பித்ரு பக்ஷத்தின் போது ஜோதிர்லிங்கம் போன்ற முக்கிய கோவில்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நகை வாங்கக் கூடாது : தங்கம், வெள்ளி அல்லது வைரத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை வாங்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. ஆண்கள் முடி, நகங்களை வெட்டுவது மற்றும் ஷேவிங் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
Mahalaya Paksha 2024
சுப நிகழ்ச்சிகள் இல்லை: இந்த நேரத்தில் வீட்டில் நிச்சயதார்த்தம், திருமணம் அல்லது பிற கொண்டாட்டங்கள் போன்ற விழாக்கள் நடத்தக்கூடாது. தொழில் முயற்சிகளைத் தாமதப்படுத்துதல்: பித்ரு பக்ஷத்தின் போது புதிய தொழில் அல்லது வேலையைத் தொடங்குவது பரிந்துரைக்கப்படவில்லை.
பித்ரு பக்ஷ காலத்தில் சந்ததிகள் தங்கள் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ளவும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.. பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், தடைசெய்யப்பட்ட செயல்களைத் தவிர்ப்பதன் மூலமும், பக்தர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு மரியாதை கொடுக்கவும் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.