இந்த '3' கருப்பு பொருட்கள் வீட்டில் இருக்கா? கெட்ட சக்திகள் விலகி ஓடும்!
Negative Energy At Home : உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் அவற்றை நீக்க சில கருப்பு பொருட்களை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.

இந்த '3' கருப்பு பொருட்கள் வீட்டில் இருக்கா? கெட்ட சக்திகள் விலகி ஓடும்!
உங்கள் வீட்டில் ஏதாவது நீங்கள் வினோதமாக உணர்ந்தாலோ, வீட்டில் உள்ளவர்கள் பிரச்சனைகள் மேல் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருந்தாலோ இது போன்ற பல அசம்பாவிதங்கள் உங்கள் வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான் இது. ஜோதிட சாஸ்திரங்களில் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் சில கருப்பு பொருட்களை வீட்டில் வைத்தால் மட்டும் போதும் எதிர்மறை சக்திகள் நீங்கிவிடும்.
எதிர்மறை சக்தியை விரட்டும் கருப்பு பொருட்கள்
பொதுவாக வீட்டில் இருக்கும் சில கருப்பு பொருட்கள் எதிர்மறை சக்தியை ஈர்க்கின்றனர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் மறுபுறமோ சில கருப்பு பொருட்களை வீட்டில் வைத்தால் மட்டுமே எதிர்மறை சக்தியை அகற்ற முடியும் தெரியுமா மேலும் அவை நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடையது என்பதால், வீட்டில் எதிர்மறை சக்திகள் தாங்காது இப்போது, வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்ட உதவும் அந்த கருப்பு பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருங்கல்:
கருப்பு நிற கல்லானது எந்த வகையான ஆற்றலையும் ஈர்க்கும் சக்தியை கொண்டது என்று நம்பப்படுகிறது. இருப்பினும் கருங்கல்லானது, வீட்டில் அதை வைக்கும் திசை பொறுத்தது. ஏனெனில் நீங்கள் அதை தவறான திசையில் வைத்தால் நேர்மறை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கிறது. அதுவே சரியான திசையில் வைத்தால் நேர்மறை ஆற்றல் ஈர்க்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டின் தெற்கு திசையில் நீங்கள் கருங்கல்லை வைத்தால் எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படும்.
இதையும் படிங்க: சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தப்பி தவறி கூட இந்த '3' காரியங்களை செஞ்சிடாதீங்க! பணக்கஷ்டம் வரும்
கருப்பு சட்டி:
வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதற்கு முக்கிய காரணம் கிரக தோஷம் தான். பிரகதோஷம் ஏதேனும் இருந்தால் வீட்டில் கெட்ட சக்திகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இதற்காக நீங்கள் வெவ்வேறு கிரகங்களுக்கு என வெவ்வேறு பரிகாரங்கள் ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதற்கு உங்கள் வீட்டின் சமையலறையில் கருப்பு இரும்பு சட்டியை வைக்கவும். இதன் மூலம் ஒன்பது கிரகங்களும் ஒருங்கிணைந்து சாந்தமடைந்து, அவற்றின் தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடும்.
இதையும் படிங்க: தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? உங்க வீட்ல 'இந்த' வாஸ்து பிரச்சனைகள் இருக்கலாம்!
கருப்பு சிலை:
உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் அவற்றை விரட்ட கருப்பு சிலையை வீட்டில் வைக்கவும். இது எதிர்மறை சக்தியை விரட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீங்கள் வைக்கும் கருப்பு சிலையானது ஒரு மிருகத்தின் சிலையாக தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தெய்வத்தின் சிலை வைக்க வேண்டாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி யானை, ஆமை, குதிரை போன்ற விலங்குகளின் சிலைகளை வைக்கலாம்.