- Home
- Spiritual
- வீடு கட்டுவதில் தடையா? காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியின் இந்த ஒரு பரிகாரம் போதும் - உடனே வீடு அமையும்!
வீடு கட்டுவதில் தடையா? காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியின் இந்த ஒரு பரிகாரம் போதும் - உடனே வீடு அமையும்!
Karuppasamy Remedy for dream House Construction ; புதிய வீடு கட்டத் தொடங்குபவர்கள் அல்லது நிலம் வாங்குவதில் சிக்கல் உள்ளவர்கள் கருப்பண்ண சுவாமிக்கு அடிக்கல் பரிகாரம் செய்வது எப்படி? வெற்றிகரமாக வீடு கட்டி முடிக்க எளிய வழிமுறைகள்.

காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியின் பரிகாரம்
பொதுவாக எல்லோருக்குமே சொந்த வீடு கட்ட வேண்டும், வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், எல்லொருக்கும் அப்படி நடந்து விடாது. இது பொருளாதார ரீதியிலான காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாகவோ கூட இருக்கலாம். அப்படி வீடு கட்ட வேண்டும் என்று கனவு நிறைவேறு என்ன செய்ய வேண்டும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மலை கொல்லிமலை தான்.
கொல்லிமலை ஏறுவதற்கு 72 வளைவு மலை ஏற வேண்டும். மலையை ஏறுவதற்குள் உடம்பு கிடுகிடுத்து விடும். அங்கு சிறப்பு மிக்க அதிசயமான ஒரு கோயில் உள்ளது அந்த கோயில்தான் மாசி பெரியண்ணா சுவாமி கோயில். கோயிலுக்கு மற்றொரு பேரும் உண்டு. கற்ப சாமி கோயில் என்றும் மக்களால் கூறப்படுகிறது. மாசிக் குன்றில் அமைந்துள்ள ஒரு சக்திவாய்ந்த தெய்வக் கோவிலாகும்.
கொல்லிமலை கருப்பனின் வரலாறு:
காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.
அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார். அப்போது இருந்தே இந்த கோயில் உருவானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாகவும் மக்கள் பெரியண்ணசாமி என்று அழைக்கப்படும் கருப்பனை வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கருப்பனின் பெண் காவல்தெய்வம்:
கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் பகுதியில் உள்ளது. மிகவும் சிறப்பு வைக்க இந்த கோயில் துடியான தெய்வம் என்று கூறப்படுகிறது. ஒரு பெண் நினைத்தால் இதையும் சாதிக்கலாம் என்பதற்கு எட்டுக்கை அம்மன் ஒரு உதாரணமாக அந்தப் பகுதியில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு வீரமிக்க ஒரு பெண் காவல் தெய்வம் என்றால் அது இவர்தான் என்றும் கூறுகின்றனர்.
கருப்பனிடம் வேண்டுதல்:
பில்லி சூனியம் ஏவல் பிசாசு அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர். தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றன உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர் ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர் படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு உள்ளது.கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள் என்றால் வீடு கட்டுவதற்கு இந்த பரிகாரம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் அதிகமாக இருப்பது மணிகள் மட்டுமே. மணிகளை கட்டுதல், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.