- Home
- Spiritual
- Kantha sasti viratham: கந்த சஷ்டி விழா 2025.! 3 ம் நாள் விரதம்.! முருகனை வழிபடும் முறைகள்.!
Kantha sasti viratham: கந்த சஷ்டி விழா 2025.! 3 ம் நாள் விரதம்.! முருகனை வழிபடும் முறைகள்.!
கந்த சஷ்டி விரதத்தின் 3வது நாளில், 'ஓம் சரவண பவ' மந்திரம் ஜபித்து, சட்கோண கோலத்தில் 'வ' எழுத்தின் மீது 3 விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, எறும்புகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் எதிரிகள் விலகுவர்.

கந்த சஷ்டி 3 ஆம் நாள் விரதம்
முருகப் பெருமான் ஞான குருவாகவும், தகப்பனுக்கு பிரணவ மந்திரம் உபதேசித்த ஞான தெய்வமாகவும் விளங்குகிறார். முருக பெருமானை நினைத்தாலே எல்லா வளமும் கிடைக்கும். அதுவும் சஷ்டி காலத்தில் நினைத்தால் நல்லவை எல்லாம் வரும். அல்லவை எல்லாம் அகலும். கந்த சஷ்டி விழாவின் 3வது நாள் விரதம் அக்டோபர் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அந்நாளில் முருகனை வழிபட்டால் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் செல்வம் எல்லாம் கிடைக்கும்.
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த ஆற்றல் தரும்
அக்டோபர் 24, 2025 வெள்ளிக்கிழமை, கந்த சஷ்டியின் மூன்றாவது நாள் விரதம் நடைபெறுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் “ஓம் சரவண பவ” மந்திரத்தை 108 முறை ஜபம் செய்ய வேண்டும். கலசத்தில் புதிய பூவைச் சமர்ப்பித்து, சட்கோணக் கோலம் போடுவது அவசியம். இன்று “வ” என்ற எழுத்தின் மீது மூன்று விளக்குகளை ஏற்றி முருகனை வழிபட வேண்டும்.
சட்கோணம் என்பது முருகனின் தெய்வீக யந்திரமாகக் கருதப்படுகிறது. அதில் விளக்கேற்றி வழிபட்டால் எதிரிகள் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும். எதை நினைத்து வழிபடுகிறோமோ, அது நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சஷ்டி நாட்களில் மட்டுமின்றி, முருகனுக்குரிய பிற திருநாள்களிலும் இம்மாதிரியான வழிபாடு பலமடங்கு பலனை தரும். தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த ஆற்றல் தரும். உபவாசம் இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
நைவேத்தியம் மற்றும் தானம்
மூன்றாவது நாளில் முருகனுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு அதை நாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் பகிர்ந்து தானமாக வழங்கலாம். மேலும், இந்த நாளில் எறும்புகளுக்கு தானம் செய்வது பெரும் புண்ணியத்தை தரும். பச்சரிசி மாவில் வாசலில் கோலம் போட்டு, எறும்புகள் இருக்கும் இடத்தில் பச்சரிசி மாவையும் சிறிது சர்க்கரையையும் தூவலாம். இது அனைத்து உயிர்களுக்குமான தானமாகக் கருதப்படுகிறது.
காலை அல்லது மாலை, நமக்கு ஏற்ற நேரத்தில் நைவேத்தியம் செய்து, அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. இந்த மூன்றாவது நாள் வழிபாடு முருகனின் அருளை உச்ச நிலையில் பெறச் செய்யும். ஓம் சரவண பவ!