MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Investment: வெள்ளியை நாடும் முதலீட்டாளர்கள்! தங்கத்துக்கு என்னாச்சு?!

Investment: வெள்ளியை நாடும் முதலீட்டாளர்கள்! தங்கத்துக்கு என்னாச்சு?!

தங்கத்தின் விலை உயர்வு தேக்கமடைந்துள்ள நிலையில், வெள்ளி முதலீட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தொழில்துறை தேவை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் வெள்ளி விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 11 2025, 07:57 AM IST| Updated : Jul 11 2025, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
வெள்ளி கொடுக்குது சந்தோஷம்
Image Credit : Asianet News

வெள்ளி கொடுக்குது சந்தோஷம்

தங்கத்துக்கு என்னாச்சு? என்ற கேள்வி முன்னெடுக்கப்படும் நிலையில், வெள்ளி கொடுக்குது சந்தோஷம் என முதலீட்டாளர்கள் முழக்கமிட தொடங்கியுள்ளனர். தங்கம் என்பது பாதுகாப்பின் அடையாளமாகப் பார்க்கப்படும் பொருள் என்றால் மிகையல்ல. “சேஃப்டி ஹெவன்” என அழைக்கப்படும் தங்கம் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சர்வதேச பதற்றங்களில் விலை சீராக இருந்து முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஆனாலும் தற்போது உலக அரசியல், வர்த்தக உள்நிலை, மத்திய வங்கிகளின் கொள்கைகள் என பல காரணிகள் தங்கத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்தியுள்ளன. அதே சமயம் வெள்ளி மெல்ல மேல் நோக்கி செல்லும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கூட வெள்ளியில் முதலீடு செய்யலாம் என சந்தை நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

27
ஆண்டுக்கு ஆயிரம் டன் தங்கம்
Image Credit : Asianet News

ஆண்டுக்கு ஆயிரம் டன் தங்கம்

கடந்த சில வருடங்களாக உலகமெங்கும் மத்திய வங்கிகள் தங்கத்தை பெருமளவில் குவித்து வந்தன. 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மட்டும் வருடத்திற்கு 1,000 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணம், அமெரிக்கா-சீனா வர்த்தக யுத்தம், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போராட்டம் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலக அளவிலான பணவீக்கம். முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தங்கத்தை கொள்முதல் செய்ய தொடங்கினர். கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க பணவீக்கம் கட்டுப்பாட்டுக்கு வருவதால், மத்திய வங்கிகளும் தங்கம் வாங்குவதில் பின்னடைவது தொடங்கியது. குறிப்பாக ஆசிய நாடுகளில் தங்கம் மீதான தேவை குறைந்திருப்பதும் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. டாலர் மதிப்பு வலுவடைந்ததாலும் வட்டி விகிதங்கள் உயர்ந்ததாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட்டு விலக ஆரம்பித்தனர்.

Related Articles

Related image1
Silver: கொஞ்சம் முதலீடு.! மிஞ்சும் வருமானம்.! கிராம்களில் வாங்கினாலே போதும்.!
Related image2
Evergreen முதலீடா Silver?! உச்சத்தில் "வெள்ளி", அள்ளிக்கொடுக்குமா லாபத்தை?!
37
தொழில்துறை தேவை, முதலீட்டு ஆர்வம்
Image Credit : Asianet News

தொழில்துறை தேவை, முதலீட்டு ஆர்வம்

வெள்ளியை, தங்கத்துடன் ஒப்பிட்டால், மிகவும் செயல்மிக்க உலோகமாக இருக்கிறது. வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாது, தொழில்துறையில் அவசியமான உலோகமாக விளங்குகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள், சோலார் பேனல்கள், பிளாஸ்மா டிவிகள், பேட்டரிகள் என விரிவான பயன்பாடுகள் வெள்ளியின் தேவையை நிலையானதாக வைத்திருக்கின்றன. சர்வதேச சோலார் சக்தி விரிவுபாடுகள் பெருகுவதால் வெள்ளி மீதான தேவை வருடந்தோறும் சுமார் 5%-7% உயர்ந்து வருகிறது. இதனால் சப்ளை-டிமாண்ட் இடைவெளி அதிகரித்து, விலை உயர வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வெள்ளி விலை சுமார் 10%-இற்கு மேல் உயர்ந்திருப்பது இதற்கு சான்று.

47
அப்பாடா! எல்லாத்துக்கும் அமெரிக்காவா?
Image Credit : Asianet News

அப்பாடா! எல்லாத்துக்கும் அமெரிக்காவா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு சர்வதேச சந்தைகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 15% முதல் 40% வரையிலான வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் இந்த தீர்மானம், உலகளாவிய பொருளாதாரத்தை குழப்பும் அபாயம் கொண்டது. இந்த வரி உயர்வால் அமெரிக்கா-ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறையும், உற்பத்தி செலவுகள் உயரும், பணவீக்கம் மீண்டும் தலைதூக்கும் என்ற நிலை உருவாகலாம். வர்த்தக பதற்றம் பெருகும்போது முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் மீது மாறும் வாய்ப்பு உள்ளது. வர்த்தக சிக்கல்கள், சர்வதேச நெருக்கடிகள் தங்கம் விலை உயர ஏதுவாகலாம்.

57
வெள்ளி மீதான மோகம் அதிகரிப்பு
Image Credit : Asianet News

வெள்ளி மீதான மோகம் அதிகரிப்பு

உக்ரைன்-ரஷ்யா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதில் இருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய், இயற்கை எரிவாயு தட்டுப்பாடுகள் உலக பொருளாதாரத்தில் விலை ஏற்றத்தை கொண்டு வந்துள்ளன. அதேபோல் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை மீண்டும் தீவிரமாகி இருப்பதும் பதற்றத்தை அதிகரிக்கிறது.இந்த சிக்கல்கள் நீடிக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை “பாதுகாப்பு புகலிடம்” எனக் கருதி வாங்குவார்கள். ஆனால் இந்த நேரம் வெள்ளியின் தொழில்துறை தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், வெள்ளி முதலீட்டில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவோர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

67
முதலீட்டாளர்களுக்கு நிபுணர்களின் அறிவுறை
Image Credit : Asianet News

முதலீட்டாளர்களுக்கு நிபுணர்களின் அறிவுறை

தங்கம் – நீண்டகால முதலீட்டாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு. ஆனால் விலை மந்தமாக இருக்கலாம். சர்வதேச நிகழ்வுகள் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவரும். வெள்ளி – தொழில்துறை தேவையால் விலை உயர வாய்ப்பு அதிகம். குறைந்த முதலீட்டுடன் விலை ஏற்றம் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.ETFs மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு – நேரடி ஆபரணத் தங்கம் வாங்க வேண்டாம். ETFs அல்லது தங்க பாண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.நேரடி நாணய வணிகம் தவிர்க்கவும் – தங்கம், வெள்ளியில் தினசரி விலை ஏற்ற இறக்கம் அதிகம். சுருக்கம் நோக்கி முதலீடு செய்யும் போது கவனம் அவசியம். சர்வதேச நிகழ்வுகளை கவனிக்கவும் – அமெரிக்கா, சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளின் நடவடிக்கைகள் விலைகளை ஒரு நாள் இரவில் மாற்றி விடும்.

77
நீண்ட கால முதலீட்டுக்கு வெள்ளியே சரி
Image Credit : Asianet News

நீண்ட கால முதலீட்டுக்கு வெள்ளியே சரி

தங்கம், வெள்ளி சந்தைகள் எப்போதும் சவால்களை கொண்டவை. ஆனால் இன்றைய சூழலில் தொழில்துறை ஆதாரமும், புவிசார் அரசியல் பதற்றமும், வர்த்தக நெருக்கடியும், மத்திய வங்கிகளின் கொள்கைகளும் ஒருங்கிணைந்து விலைகளில் சீரற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுத்தும்.உங்கள் முதலீட்டுத் திட்டம் நீண்டகாலமானதாக இருந்தால், தங்கம் தொடர்ந்து பாதுகாப்பான ஆதாரமாக இருக்கும். குறுகிய மற்றும் நடுநீளகால வளர்ச்சி நம்பிக்கை கொண்டால் வெள்ளி சிறந்த தேர்வாகலாம். எந்த முறையிலும், முன் ஆராய்ச்சி செய்து, நிபுணர் ஆலோசனை பெற்று, திட்டமிட்ட முதலீடு செய்வது மட்டுமே உங்கள் பணத்தை பாதுகாக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
முதலீடு
வணிகம்
தங்க நகை
வெள்ளி
குழந்தைகளுக்கு வெள்ளியின் நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved