MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சனிக்கிழமை இந்த விஷயங்களை நேரில் பார்த்தால் செம்ம அதிர்ஷ்டம்.. சனி பகவான் அருளை எப்படி பொழிவார் தெரியுமா?

சனிக்கிழமை இந்த விஷயங்களை நேரில் பார்த்தால் செம்ம அதிர்ஷ்டம்.. சனி பகவான் அருளை எப்படி பொழிவார் தெரியுமா?

சனிக்கிழமையில் எதை பார்த்தால் சனி பகவானின் ஆசியும் அருளும் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.  

2 Min read
Author : maria pani
Published : Feb 04 2023, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எந்த கெட்டது நடந்தாலும் சனி பகவான் மீது பழி போடும் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் எல்லா நேரமும் உங்களை தண்டிப்பது சனி பகவானின் வேலையில்லை. தவறான வழியில் செல்பவர்கள் தான் சனிக்கு பயப்பட வேண்டும். அவருக்கு கோபம் வந்தால் தணிய காலம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் நாம் நியாயமாக நடந்து கொண்டால் ஆசியும் வழங்குவார். 

சனி பகவானின் அருள் உங்கள் மீது இருந்தால் சில அறிகுறிகள் மூலம் சனிக்கிழமை அன்று அதை தெரிந்து கொள்ளலாம். இந்து சமயத்தின் நம்பிக்கையின்படி, சனிக்கிழமைகளில் கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அறிகுறியை நீங்கள் கண்டிருந்தால் சனி பகவான் உங்களுக்கு கருணை மழை பொழிவார் என அர்த்தம். உங்களுக்கு விரைவில் நல்ல நேரம் தொடங்கி விடும். அதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

அதிகாலையில் யாசகரை காண்பது... 

சனிக்கிழமை அன்று அதிகாலையில் நீங்கள் யாசகரை பார்த்தால், அப்போது அவர் உங்களிடம் ஏதாவது கேட்டால், அது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இது சனி பகவானின் சோதனை. உங்கள் வசதிக்கு ஏற்ப யாசகனுக்கு உதவுங்கள். சனி பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆசியையும் வழங்குவார். 

36

கருப்பு நாய் 

சனிக்கிழமை சனீஸ்வரன் கோவிலுக்கு முன்னால் கருப்பு நாய் கண்ணில்பட்டால், அது உங்களுக்கு நல்லது நடப்பதற்கான அறிகுறி. சனிபகவானின் அருள் கிட்ட இந்நாளில் அந்த கருப்பு நாய்க்கு அன்னமிட மறக்காதீர்கள். 

46

கறுப்பு மாடு

சனிக்கிழமை நீங்கள் சில முக்கிய வேலைகளை முடிக்க வெளியே செல்லும் போது வழியில் கருப்பு மாடு கண்ணில் பட்டால் அந்த வேலை நிச்சயம் சுபமாக முடியும். அதனால் தான் சனிக்கிழமை அன்று கருப்பு பசுக்கு பூஜை செய்ய முன்னோர் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கு வசதி இருந்தால் கருப்பு பசுவை சனியன்று தானம் செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் இருந்து எல்லா பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும். 

56

தூய்மைப் பணியாளர்கள் 

சிலர் காலை விழித்ததும் தூய்மைப் பணி செய்பவர்களைக் கண்டால் மீண்டும் படுக்கைக்கு செல்வார்கள். அதன் பிறகு கடவுள் முகம் கண்டு வேலையை தொடங்குவார்கள். ஆனால் சனியன்று அவர்களை காண்பது உங்களுக்கு அதிர்ஷ்டம். அவர்கள் தரையை துடைப்பதை நீங்கள் கண்டால் அது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சனிக்கிழமை தூய்மை பணியாளர்களுக்கு ஏதாவது தானம் செய்வது உங்களின் செல்வத்தை பெருக்கும். 

66

காகம்

சனிக்கிழமையன்று உங்களுடைய வீட்டு முற்றத்தில் தாகம் தணிக்க காகம் வந்தாலோ, உங்கள் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அருந்தினாலோ அதை நல்ல சகுனம் என்கிறது சாஸ்திரம். இதைப் பார்ப்பவர் சனிபகவானின் ஆசியை பெறுவார்களாம். அதே நேரம் சனிக்கிழமையன்று உங்களுடைய தலையில் காகம் கொத்தினால், நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சனிபகவான் உங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பதன் அறிகுறிதான் இது. 

சனிக்கிழமை செய்ய வேண்டிய தானங்களை செய்து சனி பகவானின் அருளை பெறுங்கள். 

இதையும் படிங்க: தைப்பூசம் அன்று நேரில் காட்சி கொடுப்பாரா முருகன்? புராண வரலாறு சொல்லும் அற்புதங்கள் அறிவோம்!

இதையும் படிங்க: பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? அங்க மச்சம் இருக்க பெண்களை தோற்கடிக்கவே முடியாதாம்!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பேய், பிசாசு நடமாட்டத்தை உணர முடியும்.! அமானுஷ்ய விஷயங்கள் கண்ணுக்கு தெரியுமாம்.!
Recommended image2
கற்பூரம் திடீரென அணைந்தால் என்ன அர்த்தம்? பலரும் தவறாக நம்பும் உண்மை இதோ!
Recommended image3
Sani Peyarchi: 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved