MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 7th Apr 2023: சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க.! அவசரமான முதலீட்டால் இழப்பு

Today Rasipalan 7th Apr 2023: சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க.! அவசரமான முதலீட்டால் இழப்பு

ஏப்ரல் 7ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 07 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்: 

வேலையை விரைவில் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பிச்சென்று உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வேலையை செய்யுங்கள். பொருளாதார பிரச்னையில் இருப்பவர்களுக்கு இன்று பணம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து மகிழுங்கள். அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
 

212

ரிஷபம்:

அவசரப்பட்டு முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய தினம் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
 

312

மிதுனம்:

இன்றைய தினம் ஏதாவது பிரச்னைகள் வரலாம். மற்றவர்களின் உதவியுடன் அதை  எதிர்கொள்வீர்கள். உங்கள் அன்பிற்குரியவரிடமிருந்து வரும் ஃபோன் கால் மகிழ்ச்சியளிக்கும். எந்தவிதமான ஆவணத்திலோ அல்லது தொழிலில் ஒப்பந்தத்திலோ கையெழுத்திடாதீர்கள்.
 

412

கடகம்:

இன்று உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். அறிமுகமில்லாதவரின் அறிவுரையின் பேரில் நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் தபால் மூலம் வரும். 

512

சிம்மம்:

வீட்டில் வேலை செய்யும்போது தனிக்கவனம் எடுத்து செயல்படவும். பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் கடன் கொடுத்த பணம் இன்று திரும்ப கிடைக்கும். மற்றவர்களை இன்று அதிகம் கவர்வீர்கள். எதிர்பார்த்திராத ரிவார்ட் கிடைக்கும். 
 

612

கன்னி:

கமிஷன் - டிவிடண்ட் - ராயல்டி மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்வது முட்டாள்தனம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.
 

712

துலாம்:

குழந்தைகளின் படிப்புக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உங்கள் காதலரை பிரிந்து வேதனைப்படுவீர்கள்.
 

812

விருச்சிகம்:

இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் அறிவும் திறமையும் நகைச்சுவை உணர்வும் மற்றவர்களை கவரும். கிரியேட்டிவான வேலைகளில் ஈடுபடுவீர்கள். வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
 

912

தனுசு:

அலுவலகத்தில் உங்கள் சீனியர்களின் அழுத்தம் மற்றும் வீட்டு பிரச்னை ஆகியவை உங்கள் வேலையை பாதிக்கும். வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். நீங்கள் சரி என்பதை நிரூபிப்பதற்காக உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும்.
 

1012

மகரம்:

யோகா, தியானம் செய்யுங்கள். எதிலாவது முதலீடு செய்தவர்கள் இழப்பை சந்திக்கலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பேசும்போது கவனம் தேவை. இன்றைய தினம் உங்களுக்கு மிகச்சிறப்பாக இருக்கும்.
 

1112

கும்பம்:

புதிய ப்ராஜக்ட்டுகளுக்கான நிதி கிடைக்கும். வீட்டு பரமாரிப்பு மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் தெரியாமல் செய்த தவறால் பிரச்னை ஏற்படலாம்.

1212

மீனம்:

உங்கள் கருத்துகளை சொல்வதற்கு தயங்க வேண்டாம். பிரச்னையை சமாளிக்க நீங்கள் உங்களை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அதன்மூலம் உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை கஷ்டப்படுத்தலாம். அதனால் பேச்சில் கவனம் தேவை.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved