MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 9th Apr 2023: பிரச்னைகளை கண்டு பயப்படாதீங்க..! பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்னை வேண்டாம்

Today Rasipalan 9th Apr 2023: பிரச்னைகளை கண்டு பயப்படாதீங்க..! பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்னை வேண்டாம்

ஏப்ரல் 9ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 09 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

பொருளாதார நிலை வழக்கம்போலவே இருக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் இணைந்து பொருளாதார திட்டமிடுவீர்கள். மன அழுத்தத்தால் எந்த வேலையையும் புறக்கணிக்காதீர்கள். 
 

212

ரிஷபம்:

இன்றைய நாளின் தொடக்கத்திலேயே முக்கியமான வேலையை செய்து முடியுங்கள். ஆலோசனையில் அதிக நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் திட்டங்களை உடனே செயல்படுத்த தொடங்குங்கள். குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
 

312

மிதுனம்:

சுய ஆய்வுக்கான நேரம். வதந்திகளில் கவனம் செலுத்தாதீர்கள். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். பிரச்னைகளை கண்டு பயப்படாமல் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். உங்கள் முக்கியமான வேலைகளை நீங்களே செய்யுங்கள்.
 

412

கடகம்:

எவ்வளவு மோசமான சூழல்களையும் திறம்பட எதிர்கொள்வீர்கள். மற்றவர்களின் விஷயத்திலோ அல்லது விவாதங்களிலோ தலையிடாதீர்கள். கடின உழைப்பின் மூலம் முக்கியமான வேலையை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

512

சிம்மம்:

சிறிது காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் திறமைகளை ஆன்மீகம் மற்றும் கெரியர் சார்ந்த விஷயங்களில் செயல்படுத்துங்கள். சிறு விவாதம் குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

612

கன்னி:

மற்றவர்களை அதிகம் நம்புவதும், மற்றவர்களின் விவாதங்களில் தலையிடுவதும் பிரச்னையை ஏற்படுத்தும். அக்கம்பக்கத்தினருடன் பிரச்னை ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டம் வெற்றியளிக்கும். 
 

712

துலாம்:

மருத்துவச்செலவு அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். 
 

812

விருச்சிகம்:

வரவை விட செலவு அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையில் அக்கறை காட்டவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

912

தனுசு:

இன்றைய தினம் பொருளாதார ரீதியாக முக்கியமான முடிவை எளிதாக எடுப்பீர்கள். உங்களுக்கு அதிக ஆர்வமுள்ள செயல்களை செய்யுங்கள். கருத்து வேறுபாடுகள் பெரிய பிரச்னையாக வளரவிடாதீர்கள். காதல் மற்றும் பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடாதீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

1012

மகரம்:

குடும்பத்தினருடன் ஆன்மீகத்தில் காட்டும் ஆர்வம் வீட்டின் சூழலை நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். குழந்தைகளின் பிரச்னையை தீர்ப்பதன் மூலம் மன அமைதி அடைவீர்கள். முக்கியமான ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

1112

கும்பம்:

உறவினருடனான கருத்து வேறுபாடு நீங்கி உறவு மேம்படும். உங்களது அதிகமான சந்தேகம் மற்றவர்களுக்கு பிரச்னையாக அமையலாம். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள். 
 

1212

மீனம்:

தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட்டு எனர்ஜியை வீணடிக்காதீர்கள். தொழிலில் பாசிட்டிவான செயல்பாடுகளை தொடங்குவீர்கள். வீட்டில் இருக்கும் பிரச்னைகளை பொருட்படுத்தாதீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
சந்திர கிரகணம் முடிந்ததும் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்யுங்கள்.! இல்லையெனில் தோஷம் பிடிக்கும்.!
Recommended image3
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved