MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 7th May 2023: நிலுவையில் இருந்த சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்..!

Today Rasipalan 7th May 2023: நிலுவையில் இருந்த சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும்..!

மே 7ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : May 07 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

கிரக அமைப்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வெற்றி உங்களை தேடிவரும். நேரத்தை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்துங்கள். சகோதரர்களுடனான உறவு பாதிக்கும். எனவே கவனமாக இருக்கவும். 
 

212

ரிஷபம்:

புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதன் மூலம் பொருளாதார பிரச்னை தீரும். நண்பர்களுடன் நேரத்தை வீணடித்தால் முக்கியமான வேலையை செய்து முடிக்க முடியாமல் போகும். 
 

312

மிதுனம்:

உங்களது செண்டிமெண்ட்டை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். அதனால் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். தொழிலில் வெளிப்படைத்தன்மை அவசியம். கணவன் - மனைவி இடையே இனிமையான உறவு இருக்கும்.
 

412

கடகம்:

எந்த முக்கியமான வேலையையும் தொடங்குவதற்கு முன், அதுதொடர்பான திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும். உங்கள் திட்டங்களை தொழிலில் விரைந்து செயல்படுத்துங்கள். கணவன் - மனைவி இடையேயான பிரச்னைகள் தீரும்.
 

512

சிம்மம்:

வீட்டு பராமரிப்பு வேலை தொடர்பாக திட்டமிடுவீர்கள். பட்ஜெட்டை மனதில்வைத்து செயல்படவும். சகோதரர்கள் அல்லது உறவினர்களுடன் சொத்து பிரச்னை ஏற்படும். தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
 

612

கன்னி:

நிலுவையில் இருந்துவந்த சொத்து பிரச்னை உங்களுக்கு சாதகமாக முடியும். எந்த செயலையும் மிகுந்த கவனத்துடன் செய்யவும். கவனக்குறைவால் பண விஷயத்தில் தவறும் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். 

712

துலாம்:

இன்றைய தினம் எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் உங்கள் உள்ளுணர்வை ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுக்கொள்ளுங்கள். வீட்டு பெரியவர்களின் அறிவுரைகளை உதாசினப்படுத்த வேண்டாம். அவர்களது ஆசிர்வாதம் முக்கியம். 

812

விருச்சிகம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வாகனம் வாங்கும் திட்டமிருந்தால் கைவிடுங்கள். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். தொழிலில் கடின உழைப்பு அவசியம்.
 

912

தனுசு:

ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். சொத்து, வாகனம் வாங்கும் திட்டமிருந்தால் அதுகுறித்து சீரியஸாக யோசிக்கவும். சிறிய தவறு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது ஆதாயம் அளிக்கும். 
 

1012

மகரம்:

மாணவர்களின் கடின உழைப்புக்கேற்ற நல்ல ரிசல்ட் கிடைக்கும். தொழிலில் சில பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்களது நம்பிக்கையை அதிகரிக்கும். 
 

1112

கும்பம்:

உங்கள் மீதான நன்மதிப்பு உயரும். பொருளாதாரம் கவலையளிக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டு பெரியவர்களிடம் ஆலோசிக்கவும். புதிய தொழில் தொடங்க ஏற்ற நேரம் இது.
 

1212

மீனம்:

உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இளைஞர்கள் நேர்காணலில் வெற்றி கிடைக்காததால் கவலையில் இருப்பார்கள். தொழில், பணம் சார்ந்த விஷயங்களில் ஆவணங்களை முறையாக பராமரிக்கவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved