Today Rasipalan 30th Mar 2023: செல்ஃபோனில் வரும் குட்நியூஸ்..! சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும்
மார்ச் 30ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
மேஷம்:
உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மனதின் படி அல்லாமல் மூளையின் பேச்சை கேட்டு செயல்படவும். குழந்தைகள் எதிர்காலம் குறித்து சில முக்கியமான முடிவெடுப்பீர்கள். சிறிய விஷயத்திற்காக யாருடனாவது வாக்குவாதம் செய்வீர்கள். ரிஸ்க்கான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
ரிஷபம்:
உங்கள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். அதனால் மன உளைச்சலின்றி நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தலாம். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் நல்லுறவை பேணவும். குழந்தைகளின் கெரியர் விஷயத்தில் அவசப்பட வேண்டாம். ஊழியர்களால் அழுத்தம் ஏற்படும்.
மிதுனம்:
உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்கள் ஆக்ரோஷ குணம் பிரச்னைகளை ஏற்படுத்தும். உங்கள் கடின உழைப்பால் பணியிடத்தில் வெற்றி கிடைக்கும்.
கடகம்:
அனுபவஸ்தர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பது ஆதாயமளிக்கும். சில விஷயங்களில் சுயநலமாக நடந்துகொள்வது நல்லது. சில பிரச்னைகள் பெரிதாகும். அறிமுகமில்லாத நபர்களை நம்ப வேண்டாம்.
சிம்மம்:
நீண்டகால பிரச்னைகளை குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தீர்ப்பீர்கள். பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை. கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனத்தால் தொழிலில் பிரச்னை ஏற்படலாம்.
கன்னி:
செல்ஃபோனில் வரும் நற்செய்தியால் மனம் மகிழ்ச்சி அடையும். ஆன்மீக செயல்களில் நேரம் செலவழிப்பீர்கள். உங்கள் வேலைகளில் தடை ஏற்படும். அவசரத்தால் முழுவதுமாக முடிக்காமல் பாதியிலேயே கைவிடுவீர்கள். கடின உழைப்பும் கவனமும் தேவை.
துலாம்:
முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துங்கள். உங்கள் வேலைகளில் மற்றவர்களை சார்ந்து இருக்காதீர்கள். முக்கியமான பொருள் திருடுபோக வாய்ப்புள்ளது. தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
சொத்து ரீதியான விவகாரங்களை முடிக்க இதுவே சரியான நேரம். உங்கள் திறமை மற்றும் செயல்திறனில் மட்டும் நம்பிக்கை வைத்து செயல்படவும். கோபத்தை கண்டிப்பாக குறைத்தே தீரவேண்டும். இது உங்களுக்கு சாதகமான காலம் என்பதால் வளர்ச்சி இருக்கும்.
தனுசு:
பொருளாதார திட்டம் சார்ந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்தவும். பிரச்னையில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமான முடிவை எடுக்கவும். பிரச்னையை சுமூகமாக முடியுங்கள். பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய வேண்டாம். ஊழியர்களை மேற்பார்வையிடவும். இல்லையெனில் வேலையை சரிவர செய்யமாட்டார்கள்.
மகரம்:
நீண்டகாலமாக நீங்கள் செயல்படுத்த நினைத்துக்கொண்டிருக்கும் திட்டத்தை இப்போது செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். அனுபவஸ்தர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி நடப்பது நல்லது. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் சமரசம் செய்ய வேண்டாம்.
கும்பம்:
உங்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்தி முயற்சியையும் அதிகப்படுத்துங்கள். திட்டமிட்டபடி வேலைகள் முடியும். உங்கள் கோபத்தால் உறவுகள் பாதிக்கப்படும். அதிகமாக சிந்தித்து வெற்றியை தவறவிடுவீர்கள். வருவாய்க்கான வழிகள் அதிகரிக்கும்.
மீனம்:
பக்குவமாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். அது உங்களது பல வேலைகளை செய்து முடிக்க உதவும். ஈகோவால் சகோதரர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை ஆழமாக யோசிக்கவும். பொருளாதார சூழல் மேம்படும்.