Today Rasipalan 28th Apr 2023: முதலீடு செய்யணும்னா உடனே செய்யுங்க! பயணங்களை கண்டிப்பா தவிர்க்க வேண்டியது யார்?
ஏப்ரல் 28ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
மேஷம்:
கிரியேட்டிவான மற்றும் சமூக பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை ஏற்று செயல்படவும். மனதை அலைபாய விடாதீர்கள். பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டு பராமரிப்பு வேலை தொடர்பாக திட்டமிடுவீர்கள். தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். உங்கள் மீது நம்பிக்கை வைக்கவும். மற்றவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம்.
மிதுனம்:
நிலுவையில் இருந்த பணம் இன்று கிடைக்கும். எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் கடின உழைப்பின் மூலம் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத செலவுகள் மனதை பாதிக்கும். அக்கம்பக்கத்தினருடனான மோதலை தவிர்க்கவும். பணிச்சுமையால் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது.
கடகம்:
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்காலத்திற்காக முதலீடுகளை செய்ய ஏற்ற சமயம் இது. குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். சோம்பேறித்தனத்தால் முக்கியமான வேலையை முழுமையாக செய்ய முடியாது. புதிய வேலையை தொடங்க சரியான நேரம்.
சிம்மம்:
ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். சொத்து வாங்கும் அல்லது விற்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். தவறான செயல்பாடுகளால் பட்ஜெட்டை பாதிக்கும். பெரியவர்களின் அறிவுரையை ஏற்று செயல்படவும். தொழில் ரீதியான முக்கியமான முடிவெடுக்க சரியான நேரம் இது.
கன்னி:
கடினமாக உழைக்கவும். யாருடனான எந்த விதமான பிரச்னையாக இருந்தாலும் இன்று தீர்க்கலாம். சோம்பேறித்தனம் மற்றும் கவனக்குறைவை தவிர்க்கவும். சொத்து, வாகனம் ரீதியான வேலைகளை தவிர்க்கவும். பிரச்னைகளை தீர்க்க குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
துலாம்:
உங்கள் உத்யோக வேலையுடன் சேர்த்து, உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்யவும் நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேக்கமடைந்த கட்டுமான வேலைகளை முடிக்க சரியான நேரம் இது. பயணங்களை தவிர்க்கவும். நீங்களே பணிச்சுமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டாம். தவறான செயல்களில் நேரத்தை வீணடிக்காமல், முக்கியமான வேலையில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
மீடியா மற்றும் ஆன்லைன் தொடர்பான செயல்களில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் திட்டங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தவும். முதிர்ச்சியுடன் செயல்படவும். தொழிலில் முதலீடு செய்ய சரியான நேரம்.
மகரம்:
இன்று உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். மன உறுதியுடன் கடினமான வேலைகளையும் செய்து முடிக்க முயலுங்கள். மற்றவர்களின் அறிவுரையை கேட்டாலும் முடிவை நீங்களே எடுங்கள். பொருளாதார ஆதாயமளிக்கும் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
கும்பம்:
வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் மன அமைதியும் நிம்மதியும் அடைவீர்கள். நெருங்கிய உறவினர் மீது அதிருப்தியும் சந்தேகமும் எழும். பண பரிமாற்றம் எதுவும் செய்ய வேண்டும்.
மீனம்:
கடின உழைப்பின் மூலம் எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் செய்து முடிப்பீர்கள். சோர்வாக இருந்தாலும் இன்று முழுவதும் முழு எனர்ஜியுடன் இயங்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் மோதல் போக்கை தவிர்க்கவும். தகுதிக்கு மீறி கடன் வாங்க வேண்டாம். தொழில் முறையாக நடக்கும்.