MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 23rd Mar 2023: பூர்வீக சொத்து பிரச்னை முடியும்..! அறிமுகம் இல்லாதவர்களை நம்பக்கூடாதது யார்..?

Today Rasipalan 23rd Mar 2023: பூர்வீக சொத்து பிரச்னை முடியும்..! அறிமுகம் இல்லாதவர்களை நம்பக்கூடாதது யார்..?

மார்ச் 23ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 23 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பண விஷயங்களில் கவனம் தேவை. 

212

ரிஷபம்:

உறவுகளை வலுப்படுத்த ஈகோவை தவிர்க்க வேண்டும். பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். பயணங்களை தவிர்க்கவும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். தொழிலில் உங்களுக்கு வெற்றி காத்திருக்கிறது. உத்யோகத்தில் சிறு பிரச்னை ஏற்படலாம். உங்கள் கோபமே உங்களுக்கு எதிரியாக அமையும்.
 

312

மிதுனம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து திட்டங்களை பரிமாறிக்கொள்வீர்கள். அதன்மூலம் நிறைய பிரச்னைகள் தீரும். நேர்மறையாக சிந்தியுங்கள். பயணங்களை ஒத்திவையுங்கள். தொழில் ரீதியான வியூகங்களை வகுக்கவும்.
 

412

கடகம்:

மூத்தவர்களின் ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும். அதனால் வீட்டில் இனிமையான சூழல் நிலவும். தேவையில்லாத பிரச்னைகளில் தலையிட வேண்டாம். தொழில் செய்பவர்கள் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தவும். பணிச்சுமை அதிகரிக்கும்.
 

512

சிம்மம்:

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான தினம். திட்டமிட்டபடி வேலையை துரிதப்படுத்துங்கள். ஆன்மீக ஈடுபாடு மனநிம்மதி அளிக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம். தொழிலில் அல்லது பணியிடத்தில் சில மாற்றங்களை செய்வது ஆதாயமளிக்கும்.
 

612

கன்னி:

நேரத்தை முறையாக பயன்படுத்துங்கள். குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதிகமான வேலைப்பளுவால் மன உளைச்சல் ஏற்படும். உணர்ச்சிவசமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தொழிலில் பங்குதாரர்களுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
 

712

துலாம்:

அரசு ரீதியான வேலை தேங்கிக்கிடந்தால் அதை முடிக்க முயற்சியுங்கள். நேர்மறையாக சிந்தித்து செயல்படுங்கள். ஆன்மீகத்தில் செலவழிக்கும் நேரம் ஆக்கப்பூர்வமாக இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். முழங்கால் வலி ஏற்படலாம்.

812

விருச்சிகம்:

சமூக சேவையில் ஈடுபடுவது உங்கள் மதிப்பை உயர்த்தும். குழந்தைகள் மீது கோபப்பட வேண்டாம். எதிர்மறை விஷயங்களில் கவனம் செலுத்தாமல், தற்போதைய செயல்களில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் உங்களுக்கு சாதகமான காலக்கட்டம். உங்கள் கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
 

912

தனுசு:

நிலுவையில் இருந்த தொகை வந்து சேரும். உங்கள் இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் உழையுங்கள். இளைஞர்கள் கெரியரில் கவனம் செலுத்தவும். யாரையும் அதிகம் நம்பவேண்டாம். தொழிலில் செய்யும் புதிய பரிசோதனை ஆதாயம் அளிக்கும். போட்டியாளர்களின் நகர்வுகளை கவனமாக கவனிக்கவும்.
 

1012

மகரம்:

தடைபட்ட வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 
 

1112

கும்பம்:

சொத்து வாங்குவதோ விற்பதோ வெற்றிகரமாக முடியும். பொருளாதாரத்தில் பிரச்னைகள் ஏற்படும். உங்கள் உணர்வுகளுடன் சிலர் விளையாடுவார்கள். தொழில் முறையில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும். அது உங்கள் தொழிலின் வேகத்தை துரிதப்படுத்தி ஆதாயம் தரும்.
 

1212

மீனம்:

ஆதாயம் தரும் தொடர்புகள் கிடைக்கும். குடும்ப விஷயத்தில் பரபரப்பாக இயங்குவீர்கள். அறிமுகமில்லாதவர்களை அதிகம் நம்பவேண்டாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரச்னைகள் குறித்து அனுபவஸ்தர்களுடன் ஆலோசிக்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved