Today Rasipalan 21st Apr 2023: அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு..? எந்த முடிவாக இருந்தாலும் நீங்களே எடுங்க
ஏப்ரல் 21ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
மேஷம்:
நிலுவையில் இருந்துவந்த பணம் இன்று கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றும் திறமையால் உங்கள் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். இளைஞர்களுக்கு கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். பட்ஜெட்டை கவனத்தில் வைத்து செயல்படவும். மற்றவர்கள் பேச்சை கேட்க வேண்டாம்.
ரிஷபம்:
முக்கியமான விவகாரம் குறித்து ஆலோசனையில் உங்கள் அறிவுரைக்கு மதிப்பு கிடைக்கும். இன்று ஏற்படும் சில மாற்றங்களுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டமாகக்கூட அமையலாம். அறிமுகமில்லாதவரிடம் நெருங்கி பழக வேண்டாம். வேலையில் உங்கள் திட்டத்தை யாரிடமும் பகிர வேண்டாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் திறமை புதிய வெற்றியை பெற உதவும். உங்கள் முழு எனர்ஜியையும் பயன்படுத்தவும். கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.
கடகம்:
ஆன்மீக செயல்களில் ஈடுபட சரியான நேரம் இது. உங்கள் திட்டங்களை யாரிடமும் பகிர வேண்டாம். சோம்பல் உங்கள் முக்கியமான வேலையை கெடுத்துவிடும். எனவே சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். கோபத்தை கட்டுப்படுத்தவும்.
சிம்மம்:
நண்பர்களுடன் நேரம் செலவழித்து மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் வெற்றிகரமான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முக்கியமான வேலை ஒன்றை செய்து முடிக்க தவறுவீர்கள்.
கன்னி:
வதந்திகள் மீது கவனம் செலுத்தாதீர்கள். உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். சொத்து, வாகனத்திற்கான லோன் வாங்கும் திட்டம் இருந்தால் மீண்டும் ஒருமுறை அதுகுறித்து யோசிக்கவும். நண்பருடனான திடீர் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
ஆன்மீக பயணத்திற்கான திட்டமிடுவீர்கள். குழந்தைகளின் வெற்றி மகிழ்ச்சியளிக்கும். இன்று எல்லா முடிவுகளையும் நீங்களே எடுங்கள். வேலைப்பளுவிற்கு மத்தியிலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள்.
விருச்சிகம்:
கடினமாக உழைத்தால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மதிப்பளிக்கவும். எதிர்மறை சிந்தனைகள் மேலோங்க விட வேண்டாம். மார்க்கெட்டிங் வேலைகளை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
அறமற்ற செயல்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். செலவுகளை குறைக்கவும். மாணவர்கள் அவர்களது இலக்கிலிருந்து தடம் மாறுவார்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
மகரம்:
உங்கள் தகுதிகளை அடையாளம் காணுங்கள். நில விஷயங்களில் ஆவணங்களை சரிபார்க்கவும். நலம்விரும்பிகளுடன் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஆலோசிக்கவும். தொழிலில் ஊழியர்களின் கருத்துகளை கேட்டு செயல்படுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்:
குடும்ப உறுப்பினரின் வெற்றியால் வீட்டில் விழாக்கோலம் பூண்டு அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்கவும். முடிவெடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் சீக்கிரமாக முடிவெடுக்கவும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு வெற்றியை தரும். ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருக்கும்.
மீனம்:
இன்று உங்களுக்கு சாதகமான மற்றும் வெற்றிகரமான நாளாக அமையும். நெருங்கிய உறவினர்களுடன் நேரம் செலவிடுங்கள். அது உங்கள் உறவை மேம்படுத்தும். மற்றவர்களின் பிரச்னைகளில் தீர்க்க நினைத்தால் உங்களது முக்கியமான வேலை பாதிக்கப்படும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.