MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 18th Apr 2023: ரிஸ்க் மட்டும் எதுவும் எடுத்துராதீங்க..! எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்..?

Today Rasipalan 18th Apr 2023: ரிஸ்க் மட்டும் எதுவும் எடுத்துராதீங்க..! எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்..?

ஏப்ரல் 18ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
karthikeyan V
Published : Apr 18 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

நெருங்கிய உறவினர்களுடான மோதல் முடிவுக்கு வரும். உங்கள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்ற ரிசல்ட் கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடன் மோதல் ஏற்படலாம். 
 

212

ரிஷபம்:

நிலுவையில் இருந்த பணம் கிடைப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களுடன் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள். அப்படி வீணடித்தால், உங்கள் முக்கியமான வேலைகளை செய்ய முடியாமல் போகும். தனிப்பட்ட வேலைகள் காரணமாக உத்யோகத்தில் கவனம் செலுத்தமுடியாது. 
 

312

மிதுனம்:

நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்தவும். சிறிய விஷயத்தில் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள் தோற்றத்தை பாசிட்டிவாக வைத்துக்கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

412

கடகம்:

கடந்த சில காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே மன அழுத்தம் நீங்கும். சொத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம். பணிச்சுமையால் உடல் மற்றும் மனதளவில் சோர்வடைவீர்கள். எந்த பிரச்னையையும் அமைதியாக முடியுங்கள். 
 

512

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான தினம். நெருங்கிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். பெற்றோர் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் சுயமரியாதையை கெடுக்காதீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 

612

கன்னி:

வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். நேரத்திற்கேற்றவாறு உங்கள் பணி செய்யும் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமானதை இழக்க நேரிடும். மார்க்கெட்டிங், மீடியா தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தவும்.
 

712

துலாம்:

பணிச்சுமைக்கு மத்தியில் உங்களுக்கு விருப்பமானதை செய்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும். நெருக்கமான நபருடனான மோதல் போக்கு முடிவுக்கு வரும். ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். 
 

812

விருச்சிகம்:

குடும்பம் சார்ந்த சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அவை பாசிட்டிவ் ரிசல்ட்டை கொடுக்கும். யாருக்காகவும் பொறுப்பேற்காதீர்கள். நண்பருடனான சந்திப்பு ஆதாயம் தரும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

912

தனுசு:

கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது. எந்த வேலையையும் முறையாக திட்டமிட்டு செய்தால் இலக்கை விரைவில் அடையலாம். திடீரென வரும் பெரிய செலவால் பட்ஜெட் பாதிக்கப்படும். கடந்த சில காலமாக இருந்துவந்த பிரச்னைகள் தீரும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.
 

1012

மகரம்:

இன்று கிடைக்கும் நற்செய்தியால் உங்கள் நம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். ஆன்மீக பயணத்திற்கான திட்டமிடுவீர்கள். அறிமுகமில்லாதவர்களை நம்ப வேண்டாம். அந்த மாதிரி சமயத்தில் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். யாருக்காகவும் செலவு செய்யாதீர்கள். 
 

1112

கும்பம்:

சொத்து வாங்கவோ விற்கவோ சரியான நேரம் இது. அதீத நம்பிக்கையால் சில நேரங்களில் தவறான முடிவெடுக்கக்கூடும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியம். 
 

1212

மீனம்:

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அனுபவஸ்தர்களின் வழிகாட்டுதலில் நிறைய கற்றுக்கொள்வீர்கள். வதந்திகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம். தொழிலில் வெளிப்படைத்தன்மை அவசியம்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved