MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 22nd Mar 2023: இலட்சியம் நிறைவேறும்..! பயணங்களை தவிர்க்க வேண்டியது யார்..?

Today Rasipalan 22nd Mar 2023: இலட்சியம் நிறைவேறும்..! பயணங்களை தவிர்க்க வேண்டியது யார்..?

மார்ச் 22ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 22 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

உணர்ச்சிவசத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதிர்மறை சிந்தனைகள் உங்கள் நம்பிக்கையை குறைக்கும். உங்கள் திறமையை நம்பி செயல்படுங்கள். நீண்டகால பிரச்னை முடிந்து மனநிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212

ரிஷபம்:

இன்றைய தினம் முழுவதும் பரபரப்பாக இயங்குவீர்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எந்தவிதமான பரிமாற்றத்தில் ஈடுபட்டாலும் இழப்பே மிஞ்சும். எதிர்மறையாக பேசுவதை தவிர்க்கவும். தொழிலில் பிரச்னை ஏற்படலாம். கோபம் உங்களது வேலையை கெடுக்கும். 
 

312

மிதுனம்:

உறவினர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கி, இனிய உறவு மலரும். தொழில் மேம்படும். ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கணவன் - மனைவி இடையே அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். 
 

412

கடகம்:

மனம் மற்றும் உடலளவில் இருந்துவந்த பிரச்னை தீரும். பணம் சார்ந்த விஷயம் சரியான நேரத்தில் நடந்தேறும். எந்த வேலையையும் செய்வதற்கு முன் அனைத்து கோணங்களிலும் ஆழமாக சிந்தித்து செயல்படவும். தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். 

உகாதி பண்டிகை.. இதை மட்டுமே செய்தால் போதும்.. வறுமை நீங்கி வாழ்க்கை செழிப்பாக மாறும்..!

512

சிம்மம்:

குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும். தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். திடீரென தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். இளைஞர்கள் கெரியரில் கவனம் செலுத்த வேண்டும்.  நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும்.
 

612

கன்னி:

உங்கள் நம்பிக்கையும் செயல்திறனும் மேம்படும். அடம்பிடிப்பதால் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்திக்கொள்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்களை ஒத்திவைக்கவும். இப்போது பயணம் மேற்கொள்வது நல்லதல்ல. 
 

712

துலாம்:

குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்து விவாதிப்பீர்கள். சொத்து பிரச்னை இருந்திருந்தால், பொதுவான ஒரு நபரின் மூலமாக அந்த பிரச்னை முடிவுக்கு வரும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொருளாதார மந்தநிலை ஏற்படும். வேலையில் உங்கள் திறமையை நிரூபிக்க கடும் உழைப்பும் போராட்டமும் தேவை. 

812

விருச்சிகம்:

உங்களுக்கு சாதகமான நாள். தீட்டி வைத்திருக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துங்கள். அதிகமாக சிந்தித்தால் வாய்ப்புகள் பறிபோகும். வெளிநபரின் தலையீடு உங்களுக்கு பிரச்னையை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். தொழிலில் சிறு மாற்றங்கள் தேவை. 
 

912

தனுசு:

உங்கள் மீது நம்பிக்கை வைத்து துணிச்சலாக முடிவெடுங்கள். அப்படி செய்தால் உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் நோக்கங்களும் இலட்சியங்களும் நிறைவேறும் நாள். மாணவர்களுக்கு படிப்பிலும் கெரியரை தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. தொழில் விரிவாக்கம் சாதகமான முடிவை தரும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.

திருப்பதிக்கு இந்த நாள்களில் சென்று வழிபட்டால்.. நமது வேண்டுதல்கள் தப்பாமல் நிறைவேறும் தெரியுமா?
 

1012

மகரம்:

வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். அது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு சாதகமான ரிசல்ட் கிடைக்க தாமதமாகலாம். அவசரப்படாமல் காத்திருக்கவும். கோபம் மற்றும் ஈகோவை கட்டுப்படுத்தவும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான தினம். ஆனால் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.  குடும்பத்தில் அன்பு நிறைந்திருக்கும்.
 

1112

கும்பம்:

முக்கியமான விஷயத்தில் குழப்பம் இருந்தால் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை பெறவும். ஆதாயம் கிடைக்கும் நாள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

1212

மீனம்:

உங்கள் அறத்திலிருந்து எந்த சூழலிலும் தடம் மாற வேண்டாம். முக்கியமான பொருள் ஒன்று திருடுபோக வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved