- Home
- Spiritual
- உங்கள் வீட்டின் நிலை வாசலில் இந்த தெய்வத்தை வைத்தால் போதும்...இதுவரை தடைப்பட்ட காரியம் எளிதில் கைக்கூடும்.!
உங்கள் வீட்டின் நிலை வாசலில் இந்த தெய்வத்தை வைத்தால் போதும்...இதுவரை தடைப்பட்ட காரியம் எளிதில் கைக்கூடும்.!
Vastu tips for home: வீட்டின் நிலை வாசல் படியில் நாம் இந்த தெய்வத்தின் சிலையை வைத்தால், நம்முடைய முன்னேற்றம் தடைப்படாமல் இருக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

Vastu tips for home:
நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்கும் முன்பு, முழு முதல் கடவுளான வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகளும், வாஸ்து தேவதைகளும், மகாலட்சுமியும் நம் வீட்டு நிலை வாசலில் தான் இருக்கிறார்கள். ஆன்மீகத்தின் படி, ஒருவர் ஜாதகத்தில் குரு எவ்வளவு முக்கியமோ, அதே போல தான் ஒரு வீட்டின் நிலை வாசலும் செல்வம் பெருகும் விதமாக இருக்க வேண்டியது அவசியம்..
Vastu tips for home:
எனவே, வீடு எப்போதும் மகாலட்சுமி கடாட்சத்தோடு இருக்க அத்தகைய நிலை வாசல் படியில் நாம் குறிப்பிட்ட தெய்வங்களின் சிலையை வைக்க வேண்டும். அப்படி வைத்தால், நம்முடைய முன்னேற்றம் தடைப்படாமல் இருக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
Vastu tips for home:
நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் கவனிக்க வேண்டிய இடம் நிலை வாசல். உங்களுடைய வீடு தெற்கு திசை பார்த்த வீடாக இருந்தால், நிச்சயம் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இந்தத் திசையில்தான் வாசல் இருக்க வேண்டும். ஏனெனில், தெற்கு என்பது எமதர்மனின் திசையாக நமக்கு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vastu tips for home:
நீங்கள் வெளியே வரும்போது, நிலை வாசலில் விநாயகர் திருவுருவப்படத்தை கட்டாயம் மாட்டி வைக்க வேண்டும். அதேபோன்று, நிலை வாசல், பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் நேர்மறையான சக்திகளை ஈர்க்க வல்ல ஒன்றாக வீட்டை மாற்ற வீட்டின் நுழைவு வாயில் சரியான திசையில் வாஸ்து சாஸ்திரத்தின்படி, அமைக்கப்படவேண்டும்.
Vastu tips for home:
இதே போல வீட்டில் சக்தி வாய்ந்த வெள்ளெருக்க விநாயகரை வைத்து வழிபடுவது நல்லது. அதிலும் வீட்டில் இந்த வெள்ளருக்கு விநாயகரை வைத்து வழிபாடு செய்து வந்தால், வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும், செல்வம் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஆகும்.