MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Melmalayanur temple: 4 ஆண்டுகளுக்கு பிறகு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம்..!

Melmalayanur temple: 4 ஆண்டுகளுக்கு பிறகு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம்..!

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பழுதடைந்து இருந்த தங்கத்தேர் சரி செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.  

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 17 2023, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பழுதடைந்தது. இதனையடுத்த தேரினை புதுப்பிக்கும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் துறைசார்ந்த அலுவலர்கள், திருக்கோயில் அறங்காவலர்கள், பூசாரிகள்  மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- 2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.

34

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கத் தேர்கள் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 16 கோடி ரூபாய் மதிப்பில் 3 புதிய தங்கத் தேர்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

44

ராமேஸ்வரத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி இருந்த தங்கத் தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தேர் பவனி துவங்கப்பட்டுள்ளது. திருத்தணியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகும், வடபழனி, திருச்செந்துாரில் 2 ஆண்டுகளுக்கு பிறகும் தங்கத் தேரோட்டம் நடந்துள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சேகர்பாபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Jothidam: இன்னும் 7 நாட்களில் 5 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.! வேலை, பணம், ஆரோக்கியம் எல்லாம் டேஞ்சர்.!
Recommended image2
Astrology Tamil: குரு பகவான் உருவாக்கிய சிவ ராஜயோகம்.! 4 ராசிகளுக்கு 12 ஆண்டு கஷ்ட காலம் முடிவுக்கு வருகிறது.! இனி வசந்த காலம் தான்.!
Recommended image3
Astrology Tamil: ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved