MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மறந்தும் மற்றவர்களிடம் வாங்கக் கூடாத பொருள்கள்.. மீறினால் உங்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிடும்..

மறந்தும் மற்றவர்களிடம் வாங்கக் கூடாத பொருள்கள்.. மீறினால் உங்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிடும்..

Vastu Tips: வாழ்வில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க இந்த விஷயங்களை மறந்தும் பகிரக்கூடாது என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது. 

2 Min read
Author : maria pani
Published : Mar 09 2023, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம்மிடம் உள்ள சில பொருட்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதால் கெட்ட விஷயங்கள் நடக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது அப்படி தவறுதலாக கூட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாத சில பொருள்களை இங்கு காணலாம். 

25

நண்பர்களுக்குள், உடன்பிறப்புகளோடு என நம் ஆடைகளை மாற்றிப் போட்டுக் கொள்வது இயல்பான விஷயம். ஒருவர் ஆடையை மற்றொருவர் பகிர்ந்து கொள்வது உறவின் ஆழத்தையும், அன்பையும் காட்டுகிறது. ஆனால் வாஸ்துபடி ஆடைகளை இப்படி பரிமாறிக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதை செய்வதால் நமக்கு எதிர்மறை ஆற்றல் கிடைக்குமாம். துரதிரஷ்டமாகவும் பார்க்கப்படுகிறது. சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்படும். 

35

ஆடைகளை மாற்றிக் கொள்வது போல சிலர் காலணிகளையும், ஷூக்களையும் கூட மாற்றிக் கொள்ளுவர்.செருப்பை மற்றவரோடு பகிர்வது வாஸ்து சாஸ்திரத்தின்படி அசுபமாக கருதப்படுகிறது. கோயிலுக்கு செல்லும்போது அங்கு செருப்பு தொலைந்து போனால், வீட்டு பெரியவர்கள்" நம்முடைய ஏழரை சனி இத்தோடு விலகி விட்டது" என சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒருவருடைய பாதத்தில் இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. ஆகவே பிறருடைய செருப்பை யாராவது அணிந்தால் சனியின் கோபம் அணிந்தவர் மீது போய்விடுமாம். பிறர் செருப்பை அணிந்தால் வீட்டில் நிம்மதியில்லாமல் போகலாம்.

 

45

உங்களுக்குப் பிரியமான நபர் அல்லது உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என எவரிடமாவது கைக்கடிகாரத்தை கடனாக வாங்கி அணிந்திருந்தாலும் நல்லதல்ல என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. சொந்த கடிகாரத்தை அணிவதுதான் நல்லது. 

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கிடுச்சு.. திடீர் பணமழை கொட்ட போகுது..!

55

மற்றவர்களிடம் பேனா கடன் வாங்கி எழுதுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கும். வங்கிகள், ஏதேனும் அலுவலகங்களில் பேனாக்களை கடன் வாங்கி எழுதி விட்டு மறந்து நம்முடனே எடுத்து வந்து விடுவோம். வாஸ்து சாஸ்திரம் இதை தவறு என்று ஆணித்தரமாக கூறுகிறது. அதாவது ஒரு நபருடைய விதிக்கும் அவருடைய பேனாவுக்கும் தொடர்பு இருக்குமாம்.  ஒரு வேளை நாம் பேனா கடன் வாங்கிய நபர் துரதிஷ்டவசமான சூழ்நிலையில் சிக்கியிருந்தால், அந்த துரதிஷ்டம் நமக்கும் வந்துவிடும்.   அதனால் யாரிடமாவது பேனா கடன் வாங்கினால் மறக்காமல் திரும்ப கொடுத்து விடுங்கள்.

இதையும் படிங்க: ஆவிகளுடன் பேச வைக்கும் ஓயிஜா போர்டு கேம்.. ஆர்வகோளாறில் விளையாடிய சிறுமிகள்.. பதிலுக்கு நடந்த அமானுஷ்யம்

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swapna Shastra: உங்க கனவுல திருநங்கைங்க அடிக்கடி வராங்களா? அப்போ இதுதான் அர்த்தம்!
Recommended image2
Salt After Sunset: மாலை நேரத்தில் உப்பை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடாது? லட்சுமி கடாட்சம் பெருக சில ரகசியங்கள்!
Recommended image3
Solar Eclipse: பகலே இரவு போல மாறப்போகுது.! நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எப்போது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved