- Home
- Spiritual
- Chanakya: ஆண்களே சாணக்கியரின் இந்த 5 அறிவுரைகளை புறக்கணிக்காதீங்க.. மீறினால் இழப்பு உங்களுக்கு தான்
Chanakya: ஆண்களே சாணக்கியரின் இந்த 5 அறிவுரைகளை புறக்கணிக்காதீங்க.. மீறினால் இழப்பு உங்களுக்கு தான்
ஆண்களுக்கு சாணக்கியர் சில எச்சரிக்கைகளை கூறியிருக்கிறார். இந்த எச்சரிக்கைகளை ஒருவர் புறக்கணிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது அவரது வீழ்ச்சி உறுதி. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களுக்கு சாணக்கியர் கூறும் அறிவுரைகள்
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவஞானி, பொருளாதார நிபுணர், நீதிபதி, ராஜதந்திரி, அரசு ஆலோசகர் ஆவார். இவர் அறிவு பொக்கிஷமாகவும் கருதப்படுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் அற்புதமான கொள்கைகளை வழங்கி உள்ளார். இது இன்றும் கூட மிகவும் பொருத்தமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு சாணக்கியர் சிலர் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவரின் கூற்றுப்படி இந்த ஐந்து பெரிய தவறுகளை செய்தால் ஆண்கள் மரியாதை, செல்வம், உறவுகள், அனைத்தையும் மெதுவாக இழக்க நேரிடும். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய சாணக்கிய கொள்கைகளின் ஐந்து முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பெண்களை அவமதிப்பது அல்லது தவறாக நடத்துவது
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார். பெண்களை தவறாக நடத்துவது, அவமதிப்பது என்பது ஆண்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைவதாக அவர் கூறுகிறார். பெண்கள் வெறும் இல்லத்தரசிகள் அல்ல. அவர்கள் ஒரு குடும்பத்தின் தூண்கள். சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள். அவர்களை இகழ்வது, கேலி செய்வது அல்லது அநீதி இழைப்பது ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒருவருக்கு பெரும் பாவத்தை கொண்டு வரும். பெண் என்பவள் சக்தி, இரக்கம் மற்றும் கலாச்சாரத்தின் சின்னங்கள் ஆவார். அவர்கள் மீதான மோசமான அணுகுமுறை அல்லது அவமரியாதை வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களை அவமதிக்கும் ஆண்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கை அமைதியற்றதாகிவிடும் என சாணக்கியர் கூறுகிறார்.
கோபத்திலும், அகங்காரத்திலும் முடிவெடுப்பது
ஆண்களின் மிகப்பெரிய எதிரிகள் கோபமும், அகங்காரமும் என்று சாணக்கியர் கூறுகிறார். கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே அமையும். கோபம் ஒருவரது அறிவை மழுங்கடித்து சரியான முடிவெடுக்கும் திறனை பாதிக்கும். அதே போல் அகங்காரம் ஒருவரை மற்றவரிடம் இருந்து பிரித்து விடும். பிறர் சொல்லும் ஆலோசனைகளை ஏற்க விடாமல் தடுக்கும். இதன் விளைவாக ஒருவர் பல வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அமைதியாகவும், நிதானமாகவும் சிந்தித்து முடிவெடுப்பதே சிறந்த வழி என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார். உறவுகளில் கோபமும் பொய்மையும் இருந்தால் அவை பலவீனமடையும். எனவே எந்த காரியத்தை எடுத்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
வீண் செலவுகள் செய்வது
பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதும், நிர்வகிப்பதும் வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆண்களுக்கு எவ்வளவு வருமானம் இருந்தாலும் அதை வீணாக செலவழிப்பது அல்லது சேமிக்காமல் இருப்பது எதிர்காலத்தில் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்வது, ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாவது, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் வீண் விரயம் செய்வது ஆகியவை ஒருவரை வறுமைக்கு இட்டுச் செல்லும். பணத்தை முதலீடு செய்வது, சிக்கனமாக வாழ்வது, அவசர கால நிதியை உருவாக்குவது போன்ற நிதி ஒழுக்கங்கள் ஒருவரை நிலையான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் அதிகம் பகிர்வது
ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் தனிப்பட்ட விஷயங்கள், குடும்ப ரகசியங்கள், அவமானங்கள் அல்லது பலவீனங்கள் ஆகியவற்றை மற்றவரிடம் வெளிப்படுத்துவது தவறு என்று சாணக்கியர் கூறுகிறார். இப்படிப்பட்ட தகவல்கள் வெளிப்படும் பொழுது மக்கள் உங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது உங்கள் பலவீனங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்தவோ வாய்ப்பு உள்ளது. உதாரணமாக நம் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி வெளியில் பேசினால் அது அவருக்கு பிற்காலத்தில் சங்கடங்களைத் தரலாம். அதேபோல் நிதி நிலைமை, தொழில் ரகசியங்களை பிறரிடம் கூறினால் அது சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே தனிப்பட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
செல்வத்தைப் பற்றி அதிக கர்வம் கொள்வது
சாணக்கியரின் நீதிபடி குரு அல்லது வழிகாட்டியின் கட்டளைகளை மீறுவது பெரிய பாவமாகும். ஒரு குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவர் சரியான பாதையில் செல்ல முடியாது. ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் பொழுது விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது அதன் பலன்களை கிடைக்காமல் செய்துவிடும். இது சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தி மன அமைதியை கெடுக்கும். ஆன்மீக ஒழுக்கம் மற்றும் குருவுக்கு மரியாதை செலுத்துவது என்பது ஒருவரின் வாழ்க்கையில் நன்மைகளையும் மன அமைதியையும் கொண்டு வரும் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார். அதேபோல் மனிதன் தனது செல்வத்தையும், அதிகாரத்தையும் பெரும் பற்றி பெருமைப்பட்டால் அவனது வீழ்ச்சி நிச்சயமென்றும், காலம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது இன்று உங்களிடம் இருப்பது நாளை பறிக்கப்படலாம். பணிவாக இருப்பதே உண்மையான மனிதனின் அடையாளம் என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.