- Home
- Spiritual
- தலைவிதியை மாற்றும் பஞ்சவர்ணேஸ்வரர்! 5 நிற சிவலிங்க வழிபாடும், அதனால் கிடைக்கும் ராஜயோகமும்!
தலைவிதியை மாற்றும் பஞ்சவர்ணேஸ்வரர்! 5 நிற சிவலிங்க வழிபாடும், அதனால் கிடைக்கும் ராஜயோகமும்!
Benefits of Worshipping 5 Color Changing Shiva Lingam : திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் ஒரு நாளைக்கு 5 முறை நிறம் மாறுகிறார். இந்த அதிசய லிங்கத்தை வணங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தலைவிதியை மாற்றும் பஞ்சவர்ணேஸ்வரர்
Benefits of Worshipping 5 Color Changing Shiva Lingam : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் மூலவரின் பெயர் தான் ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர். 5 விதமான நிறங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மூலவர் லிங்க வடிவம் உடையவர். தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம் உள்ள தலமாகும்; இங்குள்ள இறைவன் காலை முதல் மாலை வரை 5 வண்ணங்களில் மாறி மாறி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
அகஸ்தியர் கண்ட திருமண காட்சி:
எம்பெருமான் சிவன் - பார்வதி திருமணம் இமயமலையில் நடைபெற்றது. இமயமலையில் நடந்த திருமணம் என்பதால் அதனை அகத்திய முனிவரால் பார்க்க முடியவில்லை. அதனால் எம்பெருமான் சிவன் மற்றும் பார்வதி திருமணத்திற்கு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் திரண்டன. இதனால் வட திசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. உலக சமநிலை மாறுவதை சமப்படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு செல்லும் படி இறைவன் கட்டளையிட்டார். அதனால், சிவன் பார்வதி திருமணத்தை அகத்திய முனிவரால் பார்க்க முடியவில்லை.
மகம் நட்சத்திரத்திர கோயில்:
உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதியையும் முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார். இந்த கல்யாண சுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாண சுந்தரேஸ்வரர் - பார்வதி விக்ரகத்தை காண முடியும்.
மகம் நட்சத்திரத்திர கோயில்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும். மக நட்சத்திரத்தில் ஏதேனும் பிரச்சனை கிரக தோஷங்கள் இருந்தால் இந்த கோயிலில் சென்று வழிபட்டு வந்தால் இரவில் நல்லதே நடக்கும் என்று நம்பப்படுகிறது.
நிறம் மாறும் சிவலிங்கம்:
இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார். பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். காலையில் 6:00 மணியில் இருந்து காலை 8.24 மணியளவில் தாமிர நிறமாகவும், 8.24 மணியிலிருந்து 10.48 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்திலும், 10.48 இருந்து பிற்பகல் 1.12 மணி அளவில் தங்க நிறமாகவும் 1.12 மணியிலிருந்து 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 6.00 அளவில் சொல்லத் தெரியாத வர்ணத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இப்படி ஒரே நாளில் சிவபெருமான் 5 நிறங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் காட்சி இந்த கோயிலில் மட்டுமே இருக்கிறது.
பலன்கள்:
இங்கு சிவலிங்கமானது ஐந்து நேரங்களில் மாறி மாறி நிறம் மாறுவதனால் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாகவும் இருக்கிறது. இத்தகைய கோயில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற பெருமை இங்கு உள்ளது. கோயிலில் உள்ள மூலவரை வழிபாடு செய்ய நமக்கு உடலில் இருக்கும் நோய் பிணிகள் தீரும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அவருக்கு சுந்தரேசுவரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்கே அகத்தியருக்கு திருமண காட்சியளித்ததால் திருமணத்தில் தடை இருப்பவர்களும் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மக நட்சத்திரக்காரர்களுக்கு இது ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. உலகத்தில் எதுவும் பிரச்சனை இருந்தால் இங்கு வந்து சென்றால் விரைவில் அது தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.